ஐந்து வகை சரஸ்வதி தேவிகள்
கல்வி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது சரஸ்வதி தேவி தான். இந்து மதத்தில் மட்டுமல்லாமல் சரஸ்வதி தேவியை புத்த சமயத்தனரும் வழிபட்டு வந்துள்ளனர்.
அவர்கள் மகா சரஸ்வதி, வீணா சரஸ்வதி ,வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி எனும் ஐந்து வகையில் சரஸ்வதியை வணங்கி உள்ளார்கள். இப்பொழுது அந்த ஐந்து வகை சரஸ்வதிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
மகா சரஸ்வதி
மகா சரஸ்வதி வெண்மை நிறம் கொண்டவளாகவும் இரு கைகளில் வீணை ஏந்தி மேல் வலது கைகள் அபய முத்திரையும் மேல் இடது கையில் வெண் தாமரையும் வைத்திருப்பவளாக அருள் பாலிக்கின்றார்.
வீணா சரஸ்வதி
கல்வியை வழங்குபவளாக தன் இரு கரங்களில் வீணையைத் தாங்கி இசைத்தபடி இருப்பவளாக வீணா சரஸ்வதி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
வஜ்ர சாரதா
இடது கையில் புத்தகம் தாங்கியம் வலது கையில் தாமரை மலரை ஏந்தி இருப்பவளாக அருள் பாலிக்கின்றாள்.
ஆர்ய சரஸ்வதி
வலது கைகளில் செந்தாமரையும் இடது கைகளில் புத்தகமும் ஏந்தி இருப்பாள். இவளை நேபாளத்தில் வழிபட்டுவருகின்றனர்.
வஜ்ர சரஸ்வதி
மூன்று முகம் ஆறு கைகள் கொண்டவர்களாக திகழ்கிறாள் இந்த தேவி கரங்களில் தாமரை சுவடி, கத்தி ,கபாலம், சக்கரம் ,கலசம் ஏந்திருப்பாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |