சஷ்டி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டில் செய்யவேண்டிய வழிபாடு
எல்லா தெய்வங்களுக்கும் விரதம் இருந்தாலும் முருக பெருமானுக்கு தான் மக்கள் அதிக அளவில் விரதம் இருக்கிறார்கள்.அப்படியாக கந்தனுக்கு விரதம் இருக்கும் விசேஷங்களில் மிக முக்கியமான விரதம் சஷ்டி விரதம்.
இந்த சஷ்டி விரதம் இருக்கவேண்டும் என்று பலருக்கும் பல ஆசைகள் இருக்கும் ஆனால் சில உடல்நல காரணத்தால் அவர்கள் அந்த விரதத்தை மேற்கொள்ள முடியமால் போகலாம்.அவ்வாறு சஷ்டி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டில் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
கந்த சஷ்டி என்பது நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது.அப்படியாக வேண்டுதல் என்றாலே அவை தீபம் ஏற்றாமல் நிறைவேறாது.இந்த சஷ்டி காலத்தில் அதிகாலை எழுந்து குளித்து முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலன்களை தரும்.
மேலும் விரதம் இருப்பவர்கள் அவர்கள் குறைந்து அளவு உணவு எடுத்து கொண்டு சஷ்டி கவசம் படித்து முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்வார்கள்.அவ்வாறு விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டில் புதிதாக 6 அகல் விளக்கை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படியாக காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு ஆறு இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
மேலும் அவருக்கு அரளிப்பூ மாலை, மல்லிகை பூ மாலை என்று ஏதாவது ஒரு மாலையை சாற்றி ஒரு சுத்தமான தாம்பாளத்தில் ஆறு வெற்றிலைகளை வைத்து அதற்கு மேல் ஆறு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், முருகப் பெருமானின் திருநாமங்கள் போன்றவற்றை மனதார முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும்.
பிறகு அதே வழிபாட்டை மாலை நேரத்திலும் பின் பற்ற வேண்டும்.ஒரு முறை 6 அகல் விளக்குகள் வாங்கினால் போதும் அவற்றையே 6 நாட்களும் பயன் படுத்தி கொள்ளலாம்.மேலும் இத வழிபாட்டின் பொழுது நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்தது வழிபாடு செய்யவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 6 நாட்கள் காலை மற்றும் மாலை வேளையில் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டிய வரம் அருள்கிறார் முருகன்.வீட்டில் தீர்க்க முடியாத சங்கடங்கள் போன்றவற்றை முருகன் அருளால் விலகி வாழ்க்கையில் சந்தோஷகம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |