முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாக சஷ்டி விரதம் இருக்கிறது.அந்த சஷ்டி விரதம் ஆனது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாள் வருவது தேய்பிறை சஷ்டி ஆகும்.
அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
ஒருவர் சஷ்டி திதி இருக்க வேண்டும் என்றால் சஷ்டி விரதத்தை எளிமையாக எப்படி வீட்டிலேயே மேற்கொளள முடியும்.
ஒருவர் சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்?அது இருப்பதனால் அவர்களுக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
மேலும் ஒருவர் சஷ்டி விரதத்தை எளிமையாக கோவிலிலும் கடைபிடிக்கலாம். முடிந்த வரை முருகன் கோவிலில் விரதம் இருப்பது விசேஷமானது.
அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம்.
பிறகு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம்.
அவருக்கு இஷ்ட நைவேத்தியமான அவல் உணவுகளை படைக்கலாம். இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை மலை ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம்.
மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
வீட்டிலேயே முருகனின் கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.
மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின்போது சொல்ல வேண்டிய திருப்புகழை பாராயணம் செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







