துன்பத்தில் இருந்து காக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு
வாழ்க்கையில் ஆயிரம் விஷயங்கள் சந்திக்க கூடும். அவை இன்பமாகவும் இருக்கலாம், துன்பமாகவும் இருக்கலாம். அப்படியாக, நாம் வாழ்வது கலியுகம் என்பதால் அதர்மம் தான் முதலில் தர்மத்திற்கு முன் ஜெயிப்பது போல் இருக்கும்.
ஆனால், தர்மத்தின் சூழ்ச்சியே அதர்மத்தை மூச்சுவாங்க அலையவைத்து, நிம்மதி பெருமூச்சு விடும் பொழுது தர்மம் அதனுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கும். அப்படியாக, தர்மத்தின் தலைவன் என்றால் அது கிருஷ்ணா பகவான்தான்.
அவரை வழிபட கடைசி நிமிடத்திலும் வாழ்க்கையில் எதிர்பாரா மாற்றம் சந்திக்க முடியும். மேலும்,பகவான் விஷ்ணு கையில் சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக வழிபாடு செய்யப்படுகிறது. அந்த சக்கரம் தான் சக்கரத்தாழ்வார் ஆகும்.
அதாவது, கஜேந்தர என்னும் யானை கூகு என்னும் முதலையிடம் மாட்டிக்கொள்ள, பிரளயம் என்று இறைவனை அழைக்க அங்கு பகவான் வரும் முன் பெருமாளின் சக்ராயுதமே வந்து காப்பற்றியது.
அம்பரீஷன் என்னும் பக்தனை காப்பாற்ற துர்வாச முனிவரை விராட்டியதும், கிருஷ்ண பகவானின் எதிரியான சிசுபாலனை கொன்றதும் பெருமாளின் சக்ராயுதமே ஆகும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமை வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பம் விலகுவதோடு, எதிரிகளால் உண்டாகும் பயம், முன்னேற்ற தடை விலகி வாழ்க்கை பயணம் மிகவும் எளிதாக அமையும்.
ஆக, உங்களுக்கு துன்பத்தால் பயம் உண்டாகும் பொழுது சக்கரத்தாழ்வாரை மனதில் நினைத்து வழிபாடு செய்யுங்கள் உங்கள் கவலைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |