சனிக்கிழமை எள் தீபம் ஏற்றும்போது இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்!
ஒரு சிலர் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுக்கூடாது என்ற ஒரு கருத்து சொல்வதை நாம் பார்க்கலாம். அதனுடைய அர்த்தம் நாம் சனி பகவானுக்கு தீபம் ஏற்றும் பொழுது எள்ளை நேரடியாக விளக்கில் போட்டு தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆகும்.
அதற்கு பதிலாக எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் கொண்டு மண் அகல் விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றுவது நல்லது என்றும் அதுவே சனி வழிபாட்டு பரவலாக செய்யக்கூடிய ஒரு முறையாகும் என்று சொல்லப்படுகிறது.

எள் தீபம் என்பது என்ன?
ஒரு சிலர் எள்ளை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, பிறகு அதனை விளக்கின் அடியில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். இந்த முறையிலும் எள் என்பது நேரடியாக தீயில் எரிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது எள் என்பது சனி பகவானுக்கு நேரடியாக தொடர்புடைய ஒரு தானியம். ஆதலால், அதனை நேரடியாக பயன்படுத்துவதற்கு பதிலாக அதனை நெய்வேத்தியமாக படைக்கவோ அல்லது காகத்திற்கு எள் கலந்த சாதமாக வழங்குவதும் சிறப்பு என்கிறார்கள்.
சரியான தீப வழிபாடு:
சனிபகவானுடைய அருளை பெறுவதற்கு சனிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் சுத்தமான மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். தீபத்தின் முன்பாக சனி பகவானினை மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.
எப்பொழுதுமே தீபம் ஏற்றுகின்ற பொழுது கவனமாக இருப்பது அவசியம். எளிதில் தீப்பற்ற கூடிய துணி, காகிதம் ஆகியவை தூரத்தில் வைப்பது முக்கியம்.

சனிக்கிழமை வழிபாட்டு முறைகள்:
நல்லெண்ணெய் தீபம்:
அஷ்டம சனி, ஜென்ம சனி, சனி தசா புத்தி நடப்பவர்கள் சனிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் அகல்விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். அவை சனியின் கெடு பலன்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
கருங்குவளை அர்ச்சனை:
அதேபோல், சனி பகவானுக்கு கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இவை நமக்கு ஏற்படும் தடங்களை போக்கும் என்று சொல்கிறார்கள்.
எள் அன்னம்:
சனி பகவானுக்கு எள் கலந்த சாதத்தை நெய்வேத்தியமாக படைக்கலாம்.
நல்லெண்ணெய் குளியல்:
சில ஆன்மீக மரபுகளில் சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது சனி வழிபாட்டுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. இவை நமக்கு பிரச்சனைகளை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது
தர்மச் செயல்கள்:
சனிபகவானுக்கு ஒருவர் அவரை வழிபாடு செய்வதை காட்டிலும் தர்ம காரியங்களில் ஈடுபடும் நபரை மிகவும் பிடிக்கிறது. ஆக, வழிபாட்டோடு சேர்த்து கஷ்டப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதேனும் உதவிகள் செய்வது சிறப்பு. அதிலும் மாணவர்கள், ஆதரவற்ற இல்லங்கள் முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.