2026: டிசம்பர் மாதம் ராகுவின் இடமாற்றத்தால் விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் மாற்றங்கள் என்ன?
2026 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருந்து ராகு விலகுவதால் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சந்தித்து வந்த தேவையில்லாத சந்தேகமும் பிரச்சனைகளும் விலகும்.
அதேபோல் இவர்களுக்கு ராசியில் சூரியன் மற்றும் புதன் அமைந்திருப்பதால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும்.

நீண்ட நாட்களாக சந்தித்து வந்த கடன் பிரச்சினைகளும் விலகும். மாணவர்கள் அவர்களுடைய படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறக்கூடிய காலகட்டமாக விளங்குகிறது.
அதேபோல், மனதில் இருந்து வந்த வெறுமை நீங்கி கலை, இசை அல்லது புதிய பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு காட்டுவது அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளாக இருக்கும்.
இந்த காலகட்டங்களில் தேவை இல்லாத எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நன்மை பெற்றுக் கொடுக்கும். சந்திர பகவானுக்கு ஹோமங்கள் செய்வது இவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்த உதவிகரமாக அமையும்.
மேலும், விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் டிசம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றுங்கள் காத்திருக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |