செல்வம் அள்ளித்தரும் பெருமாள் வழிபாடு
பொதுவாக நம் வீடுகளில் கண்டிப்பாக பெருமாள் படம் வைத்து வழிபடுவது உண்டு.
அப்படியாக அதனுடன் சேர்த்து இன்னொரு பெருமாள் படத்தை வெளியில் இருந்துநிலை வாசல் கதவை திறந்த உடன் உங்கள் கண்களில் எதிரே பெருமாள் பிரகாசமாக தெரிவது போல் மாட்டிக்கொள்ள வேண்டும்.
இப்படி மாட்டுவதால் நம் வீடுகளில் பண வரவு அதிகரிக்கும்.
அது மட்டும் அல்லாமல் நம் வீட்டுக்கு வருபவர்கள் அந்த படத்தை பார்த்து தரிசிக்க அவர்கள் வீட்டிலும் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
அந்த பெருமாளின் திருவுருவப் படத்தில் பெருமாளுடைய தாடை பக்கத்தில் ஒரு பச்சை கற்பூரத்தை ஒட்டி வைக்க வேண்டும்.
கொஞ்சம் சந்தனம் வைத்து, அந்த சந்தனம் ஈரமாக இருக்கும் போது, பச்சை கற்பூரத்தை ஒட்டி வைத்தால் அப்படியே நின்று கொள்ளும். நெற்றியில் நாமம் போட்டிருக்கும் இடத்தில் ஒரு பச்சை கற்பூரத்தை ஒட்டி இருக்க வேண்டும்.
இதில் இன்னும் ஒரு சூட்சும ரகசியமும் இருக்கிறது. காலையில் நிலை வாசல் கதவை திறந்து, வாசல் கூட்டி கோலம் போடுவீர்கள். சில பேர் வீட்டு வாசலில் விளக்கு கூட ஏற்றுவீர்கள்.
அந்த சமயம் மகாலட்சுமி வருகை தருவார்கள் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நுழையும் போதே, பெருமாளை பார்த்தால் போதும். மனம் மயங்கி வீட்டிற்குள் குடியேறி விடுவாள். தினமும் இந்த பெருமாளுக்கு துளசி இலைகளை சாத்துங்கள்.
பெருமாளை வணங்கி விட்டு, வீட்டிலிருந்து தொழில் செய்யும் இடத்துக்கு கிளம்புங்கள். வேலைக்கு கிளம்புங்கள் உங்களுக்கு பணம் தானாக வந்து குவியும்.
பெருமாள் வழிபடு நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் திருப்பங்கள் தரும் என்பதில் எந்த வித மாற்று கருத்து இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |