செவ்வாய் தோஷம் விலக சென்னிமலை முருகன் வழிபாடு

By Sakthi Raj May 14, 2024 11:00 AM GMT
Report

கொங்கு நாடு என போற்றப்படும் கோயம்புத்தூரில் உள்ள மலைக்கோயில் சென்னிமல.புஷ்பகிரி மகுடகிரி சிரகிரி என்றும் இதற்கு பெயர்கள் உண்டு.

இங்குள்ள முருகன் தன்னை தானே பூஜித்த பெருமை கொண்டவர் இங்குள்ள மாமாங்கத் தீர்த்தம் 12 ஆண்டுக்கு ஒருமுறை பொங்கும் சிறப்புடையது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.

செவ்வாய் தோஷம் விலக சென்னிமலை முருகன் வழிபாடு | Sennimalai Murugan Hindu News Devotional Temple

கந்த சஷ்டி கவசத்தை தேவராய சுவாமிகள் அரங்கேற்றியது இங்குதான். 1984இல் இரட்டை மாட்டு வண்டிகள் பூட்டிய காளைகள் மலை ஏறிய அதிசயம் இங்கு நடந்தது.

இத்தலத்தின் புகழ் பாடும் நூல்களில் சென்னிமலை தலபுராணம் சிறப்பானது. இதை இயற்றியவர் சரவண மாமுனிவர்.

செவ்வாய் தோஷம் போக்கும் சென்னிமலை முருகனை கீழ்கண்ட திருப்புகழ் பாடி வழிபடுபவருக்கு வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.

செவ்வாய் தோஷம் விலக சென்னிமலை முருகன் வழிபாடு | Sennimalai Murugan Hindu News Devotional Temple

கன்னியம் பிகைசேய் போற்றி

கலைமதிப் புலவா போற்றி

பொன்னியந் துறையாய் போற்றி

பூந்துறை நாடா போற்றி

இன்னிலம் இயம்ப வானோர் இறைஞ்ச நான்மறை நின்றேத்தச்

சென்னியங் கிரியில் வாழும்

தேவனே போற்றி போற்றி

ஆவலங் கொழிந்தார் போற்றி

அடிதொழும் அடிகேள் போற்றி

பூவலங் கொண்டாய் போற்றி

புலாதிகட் கணுாகாய் போற்றி

கேவலங் கடந்தாய் போற்றி

கிளரொளிப் பொருளே போற்றி

சேவலங் கொடியாய் போற்றி

சிரகிரி வாழ்வே போற்றி

மோகற மொழிந்தாய் போற்றி

முராரி மாமருகா போற்றி

யாகர மறையாய் போற்றி

யாறுமுக விறைவா போற்றி

மாகர வயிலாய் போற்றி

மரகத மயிலாய் போற்றி

சேகர கிரியாய் போற்றி

சிரகிரி வாழ்வே போற்றி

தென் செய்தே னிமிர்கூ தாளஞ்

செச்சை பூங் குரவ நீப

மின்செய்பூ ணிமைக்குந் திண்டோள்

மிலைந்த பொன் மாலை யோடு

மின் சொலும் பொருளு மின்றி

வெளிறியீர்ஞ் சுவைய திர்ந்த

புன்சொலாற் றமியேன் சாற்றும்

தொடையலும் புனைவாய் போற்றி 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US