இன்றைய ராசி பலன்(29-09-2025)
மேஷம்:
சிலருக்கு வாங்கி தொடர்பான விஷயங்கள் வரலாம். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நாள். வீண் கோபத்தை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
தாய் மாமன் வழி உறவால் சிலருக்கு நன்மை உண்டாகும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நன்மையான நாள்.
மிதுனம்:
உங்கள் குடும்பத்தில் எதிர்பாராத சிக்கல்களும் அவமானங்களும் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் சிலருக்கு சில சிக்லகள் வரலாம். சகோதரன் வழி உறவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
ஒரு சிலருக்கு காலை முதல் உடலில் சிறு சிறு பிரச்சனை சந்திக்க கூடும். வாழ்க்கை துணையிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்காமல் இருப்பது நன்மை அளிக்கும்.
சிம்மம்:
காலை முதல் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். வெளியே செல்லும் பொழுது உங்கள் பொருட்களில் கவனம் தேவை. நினைத்த பொருட்களை வாங்கும் நாள்.
கன்னி:
இன்று ஒரு சிலருக்கு காலை முதல் மனம் பதட்டமாக காணப்படும். வீடுகளில் சில எதிர்பாராத சிக்கல் வரலாம். வீண் வார்த்தைகளை விடாதீர்கள். வம்பு வழக்குகள் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் உள்ளது.
துலாம்:
உங்கள் மனதில் உள்ள பாரம் குறையும். நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயத்திற்கு நல்ல பலன் பெறுவீர்கள். இறைவழிபாட்டில் முழு மனதை செலுத்துவீர்கள்.
விருச்சிகம்:
உங்கள் சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு சில சங்கடங்கள் வரலாம். வீண் பிடிவாதத்தை தவிர்க்க வேண்டும். வருமானத்தில் சிக்கனம் தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
தனுசு:
சிலருக்கு அலைச்சல் உண்டாகும். உங்கள் தாய் வழி உறவால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
மகரம்:
இன்று நீங்கள் திட்டமிட்ட வேலை அனைத்தும் சிறப்பாக அமையும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது மிகவும் கவனம் தேவை. உங்களின் நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.
கும்பம்:
வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் நாள். ஒரு சில வேலைகளை துணிச்சலுடன் செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்குஉயரும் நாள். கவனம் தேவை.
மீனம்:
குடும்பத்தில் நிம்மதி உண்டாகும் நாள். பணி இடங்களில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சிலர் கோவில் வழிபாட்டில் பங்கு கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







