ராசியை மாற்றும் செவ்வாய் பகவான்-பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டிய ராசிகள்
9 கிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பிற்பகல் 1:56 மணி முதல் சந்திரனின் ராசியான கடக ராசிக்கு மாற உள்ளார்.கடக ராசிக்கு மாறும் செவ்வாய் பகவான் கீழ்நோக்கி நகர்கிறார்.செவ்வாயின் இந்த பயணம் பல ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதிலும் குறிப்பாக 3 ராசிகளுக்கு இந்த காலம் மிகவும் சவாலானதாகஅமையப்போகிறது.அதனால் அந்த ராசியினர் சில எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
செவ்வாய் பகவான் மேஷத்தின் அதிபதி.இருந்தாலும் செவ்வாய் பகவானின் இந்த மேஷ ராசி பயணம் இவர்களுக்கு மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.வேலையில் தடை ஏற்படும்.வியாபாரிகளுக்கு சில நஷ்டம் உண்டாகும்.குடும்பத்தில் சில சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.எரிச்சல் உண்டாகும் ஆதலால் இந்த காலகட்டத்தில் தியானம் செய்வது நன்மை தரும்.
கடகம்:
செவ்வாய் இந்த ராசியில் செல்வதால்,இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.சிறு சிறு விஷயங்களில் சங்கடங்கள் வரும்.குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும்.வயிற்று பிரச்சனைகள் உருவாகும்.உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்தினால் வரும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியையும் செவ்வாய் ஆள்வதால் பெரிய பிரச்னைகள் ஏற்படும்.குடும்ப உறவுகளில் சில பிரச்சனைகள் ஏற்படும்.கணவன் மனைவி இடையே சில சண்டைகள் உண்டாகும்.மூன்றாம் நபரிடம் கவனமாக பேசவேண்டும்.ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும்.நிதானமாக எதிர்கொண்டாலே பாதி பிரச்சனை சரி ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |