ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்பட காரணம் என்ன ?

Parigarangal
By Sakthi Raj Apr 28, 2024 06:20 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

அங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தை குறிக்கும்.

அம்+காரகன் என இச்சொல்லை பிரிப்பார்கள் .அம் என்றால் அழகான நேர்த்தியான சிறப்பான என்று பொருள் உண்டு.அங்காரகன் என்ற சொல்லுக்கு நேர்மையான செயல்களை செய்பவன் என்ன பொருள்.

குடும்ப உறவை வளர்க்க கடுமையாக சோதித்து நேர்வழிப்படுத்துபவராக இவர் விளங்குகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்பட காரணம் என்ன ? | Sevviai Thosham Angaragan Parikaram Jothidam

ஒரு கதையின் மூலம் இதை தெரிந்து கொள்வோம்.

அதாவது ரத்தினபுரி என்ற பகுதியை ஆண்டு வந்தவர் செண்பகச் சோழன்.இவரது மகள் நிலவுக்கரசி. அத்தனை அழகு.தன் அழகான மகளை திருமணம் செய்து கொடுக்க பல இளவரசர்களை தேடி வந்தார் செண்பகச்சோழன்.

ஆனால் பெண் எத்தனை அழகாக இருப்பினும் இவளது ஜாதகத்தில் ஒரு குறை ஒன்று இருந்தது.அதாவது அவளுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் , ஜாதகம் பார்க்கும் இடத்தில் இவளை திருமணம் செய்பவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.ஆக இவளை திருமணம் செய்யவே எல்லோரும் அஞ்சினார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்பட காரணம் என்ன ? | Sevviai Thosham Angaragan Parikaram Jothidam

மிகவும் மனம் வருந்திய நிலவுக்கரசி அரண்மனையை விட்டு காட்டுக்கு சென்று,மிருகங்களே எனக்கு இந்த பூமியில் வாழ விருப்பமில்லை.என் உடல் வீணாக கூடாது என்பதற்காக உங்களுக்கு இரையாக வந்தேன். என்னை யார் வேண்டுமானாலும் அடித்துக் கொன்று பசியை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று புலம்பினால்.

இழந்த சொத்தை மீட்க "நிர்ஜலா ஏகாதசி" விரதம்

இழந்த சொத்தை மீட்க "நிர்ஜலா ஏகாதசி" விரதம்


அத்துடன் தன் திருமண தடைக்கு காரணமான செவ்வாய் என்னும் அங்காரகனை நினைத்து, என் மீது உனக்கு என்ன கோபமோ?ஏன் தோஷத்துடன் பிறக்க வைத்து சோதிக்கிறார் என கண்ணீர் வடித்தாள்.

அப்பொழுது ஒரு சிங்கம் அவள் மீது பாயவும் ,அதன் மீது ஒரு அம்பு வந்து விழ ,இறந்த சிங்கத்தின் உடலை எடுக்க அழகான ஒரு வீரன் வந்தான். ஒரு சிங்கத்துக்கு கூட இறையாக முடியவில்லையே என நிலவுக்கரசி அழ தொடங்கிவிட்டால்.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்பட காரணம் என்ன ? | Sevviai Thosham Angaragan Parikaram Jothidam

அவளிடம் சிங்கத்திடமிருந்து மீட்டு உன்னை காப்பாற்றி விட்டேனே பிறகு ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்க ?நான் நாடாளும் மன்னனின் மகளாக இருந்தாலும் என் திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைப்பட்டு கொண்டிருக்கிறது.

மனம் வெறுத்து சாகவே காட்டுக்கு வந்தேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சாக கூட எனக்கு யோகம் இல்லை என்றால் .

அப்போது அந்த வீரன் அங்காரகனாக உருமாறி நின்றான். பெண்ணே நான்தான் அங்காரகன் முற்பிறப்பில் நீ பறவைகளையும் மிருகங்களையும் அவற்றின் இணைகளிடமிருந்து குஞ்சு குட்டிகளை பிரித்தாய். அதை இப் பிறப்பிலும் நீ விடவில்லை.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்பட காரணம் என்ன ? | Sevviai Thosham Angaragan Parikaram Jothidam

அரண்மனை கிளிகளையும் இதர பறவைகளையும் கூட்டில் அடைத்திருக்கிறாய். என்னதான் நீ பாலும் பழமும் நல்ல உணவுகளமாக கொடுத்தாலும் அது அவற்றுக்கு திருப்தி தராது.

உலகத்தில் மனிதர்கள் உட்பட எல்லா உயிர்களும் அவரவர் துணையுடன் இணைந்து வாழ வேண்டும். அவற்றை பிரிப்பவர்களுக்கு நான் தோஷத்தை தருவேன்.

நீ உடனே அரண்மனை சென்று அவற்றை விடுவித்தாலே போதும் உன் தோஷம் நீங்கும் என்றார். நிலவுக்கரசியும் அவ்வாறு செய்து தோஷம் நீங்க பெற்று பேரழகான மாவீரனை திருமணம் செய்தார்.

உறவுகளை பிரிப்பது பெரும் பாவம் அவர்களை வழிவழியாக செவ்வாய் தோஷம் தொடரும். இனியாவது உறவை வளர்க்கும் அங்காரகனின் அறிவுரைகள் பின்பற்றுவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US