18 ஆண்டுகளுக்கு பிறகு சனி சந்திர கிரகணம்: எப்போது தெரியும்?
By Yashini
இந்தியாவில் 18 ஆண்டுகள் கழித்து காணப்படும் சனி சந்திர கிரகணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானியல் நிகழ்விற்கு சனியின் சந்திர மறைவு என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வை மனிதர்கள் வெறும் கண்களால் கூட காணலாம்.
அதாவது அக்டோபர் 14ஆம் திகதி நள்ளிரவில் இதை காணமுடியும்.
இந்த நேரத்தில் சனி சந்திரனுக்கு பின்னால் மறைந்திருக்கும். சனியின் வளையங்கள் சந்திரனின் விளிம்பில் தெரியும்.
இந்த நிகழ்வு இந்தியாவைத் தவிர இலங்கை, மியான்மர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் காண முடிகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |