30 ஆண்டுகளுக்குப் பின்.. கொட்டி கொடுக்கப்போகும் சனி - 2026ல் யாருக்கெல்லாம் உச்சம்!
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மீன ராசியில் உதயமாக இருக்கிறார். மீன ராசி குரு பகவானுக்கு சொந்த ராசி என்பதால் சனி பகவானின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
வேலை மற்றும் வணிகத்தில் குறிப்பிட தகுந்த லாபத்தை அனுபவிப்பீர்கள். வேலை இல்லாதவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வழிகள் திறக்கப்படும். உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
தனுசு
பொன், பொருள், வசதிகள் கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் வளரும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்
ஆற்றல், தைரியம், வீரம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றமும், திடீர் வாய்ப்புகளும் உருவாகும். முன்னேற்றப் பாதை கிடைக்கும். சொத்து தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகள் உங்களுக்கு பலனளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களின் புதிய திட்டங்கள் வேகமெடுக்கும். இலக்குகளை விரைவாக அடைவீர்கள்.