உயரம் மாற்றி காட்சி தரும் அதிசய சிவலிங்கம்.., எங்கு தெரியுமா?

By Yashini Feb 24, 2025 12:57 PM GMT
Report

புராணக்கதையின்படி, இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதியை மன்னர் ராஜ சிம்ம பாண்டியன் ஆட்சி செய்து வந்தார்.

அவரது அரண்மனையில் பணி செய்த பணியாளர் ஒருவர் தினமும் பாலை எடுத்துக் கொண்டு காட்டு வழியாக வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால் சில நாட்களாகவே அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பூலாமரத்தின் வேர் தடுக்கி பாலை எல்லாம் கீழே ஊற்றிக் கொண்டிருந்தார்.

இது தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தால் கோடாரியை எடுத்து வந்து தன்னை தடுக்கிவிட்ட வேரை வெட்டினார்.

உயரம் மாற்றி காட்சி தரும் அதிசய சிவலிங்கம்.., எங்கு தெரியுமா? | Shiva Lingam That Changes In Height

அப்போது அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது கோடாரி பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதைப்பார்த்து பயந்துப்போனஅந்த பணியாள் இந்த விடயத்தை மன்னரிடம் தெரிவித்தார்.

பணியாளர் கூறியதைக்கேட்ட மன்னர் உடனே அந்த இடத்தை தோண்டுவதற்கு ஆணையிட்டார். அங்கே ஒரு சிவலிங்கம் இருந்தது.அந்த சிவலிங்கம் வானுக்கும், பூமிக்குமாக உயர்ந்து நின்றது.

சிவபெருமானிடம் தன்னுடைய உயரத்திற்கு ஏற்றவாறு காட்சித் தந்து அருளும்படி மன்னர் வேண்டிக்கொண்டார் உடனே மன்னரின் அளவிற்கு ஏற்றவாறு மாறிய சிவலிங்கத்தை பார்த்து வியந்த மன்னன், "அளவிற்கு அளவானவரே"என்று புகழ்ந்து சிவலிங்கத்தை தன் மார்ப்பு கவசம் பதிய கட்டித்தழுவிக் கொண்டார்.

பணியாளர் கோடாரியை வைத்து வெட்டிய போது ஏற்பட்ட தழும்பும் சிவலிங்கத்தின் மீது இருக்கிறது. அன்றிலிருந்து மூலவரை பூலாநந்தீசுவரர் என்று அழைக்கிறார்கள்.            

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US