வீடுகளில் செய்வினை மற்றும் தீய சக்திகள் விலக பாட வேண்டிய பதிகம்
நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று இரு சக்திகளும் சூழ்ந்து ஆட்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், எதிர்மறை என்பது ஒரு மனிதன் நமக்கு தீங்கு விளைவிக்க கூடிய எண்ணத்தை, பொறாமை, குணங்கள் குறிக்கக் கூடியதாக உள்ளது.
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று தனக்கு பிடிக்காதவர்களுக்கு செய்வினை வைக்கக்கூடிய நிலையும் உருவாகிறது. அந்த வகையில் வீடுகளில் செய்வினை மற்றும் தீய சக்திகள் விலக பாட வேண்டிய முக்கியமான திருஞானசம்பந்தர்அருளிய திருநீலகண்ட பதிகம் பற்றி பார்ப்போம்.

திருநீலகண்டப்பதிகம்:
அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்,
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே,
கைவினை செய்து எம்பிரான் கழல், போற்றுதும் நாமடியோம்,
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்,
காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்,
ஏவினையால் எயில் மூன்றெறித்தீர் என்று இருபொழுதும்,
பூவினைக் கொய்து மலரடி போற்றதும் நாமடியோம்.
இந்த பதிகத்தை வீடுகளில் தினமும் பாராயணம் செய்து வர நம்முடைய செய்வினை மற்றும் ஒருவருடைய தீய வினைகள் யாவும் விலகி நம்மை சுற்றி ஒரு நேர்மறையான அதிர்வலைகள் உருவாகுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |