மன அமைதி தரும் சித்தர் ஜீவசமாதி

By Sakthi Raj May 16, 2024 08:04 AM GMT
Report

மயிலாப்பூர் சிறந்த ஆன்மிகத் தலம் மட்டுமல்ல, நிறைய சித்தர்களின் ஜீவசமாதி தலமாகவும் விளங்குகிறது. இங்கு நிறைய சித்தர்கள் வாழ்ந்து இன்னும் அருளாசி வழங்கி வருகிறார்கள்.

மயிலாப்பூர் ஆலயத்தைச் சுற்றி ஏராளமான சித்தர்கள் தவம் இருந்து ஈசனை வழிபட்டுள்ளனர். பூவுலகில் கயிலாயத்திற்கு இணையான தலமாகத் திகழ்வது மயிலை.

மன அமைதி தரும் சித்தர் ஜீவசமாதி | Sidhargal Jeevasamathi Vazhipadi Hindu News

மயிலையே கயிலை, கயிலையே மயிலே என்பது வழக்குமொழி. பதஞ்சலி, சுந்தரர், தாயுமானவர், சட்டை முனி சித்தர், அழுகுணி சித்தர் போன்ற ஏராளமான சித்தர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரரை புகழ்ந்து நிறைய குறிப்புகள் எழுதியுள்ளனர்.

மயிலாப்பூரில் கோயிலின் அருகே இரண்டு குளங்கள் உள்ளன. தற்போது சித்திரை குளம் என்று அழைக்கப்படும் குளம் முற்காலத்தில் சித்தர் குளம் என்றுதான் பெயர் பெற்று விளங்கியது.

நாளடைவில் பேச்சுவாக்கில் சித்திரை குளம் என்று ஆகிவிட்டது. இந்தக் குளத்தைச் சுற்றி ஏராளமான சித்தர்கள் தவம் இருந்தனர். அவர்களில் சபாபதி சுவாமிகளும் ஒருவர்.

மன அமைதி தரும் சித்தர் ஜீவசமாதி | Sidhargal Jeevasamathi Vazhipadi Hindu News

இவரது ஜீவசமாதி கபாலீஸ்வரர் ஆலயத்தின் தெற்கு மாட வீதியில் ஆதம் தெருவில் அமைந்துள்ளது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஜீவசமாதி இது. அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மை ஆலயம் என்று ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மன கவலையை போக்கும் சாய்பாபா தரிசனம்

மன கவலையை போக்கும் சாய்பாபா தரிசனம்


அந்தப் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு ஓரத்தில் சபாபதி சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. திருவண்ணாமலை ஆதீனம் இந்த ஜீவசமாதியை பராமரித்து வருகிறது. அந்த ஜீவசமாதிக்கு முன்பு சென்றாலே மனம் அமைதி கொண்டு விடுகிறது.

வெளியூர்களில் இருந்தும் நிறைய பேர் இந்த சித்தர் ஜீவசமாதிக்கு வந்து தியானம் செய்கிறார்கள். வேண்டியதை வேண்டியபடி அருளும் சித்தர் இவர். இரண்டு வேளை பூஜை தினமும் நடைபெறுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US