நல்ல காலம் பிறக்க "வெறி கோவிந்தர்" தரிசனம்
நாட்கள் ஓட ஓட எல்லாருக்கும் மனதில் ஒரு சில கவலைகள் உண்டாகும். அதாவது தன் நண்பர்கள் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் எல்லோருடைய வாழ்க்கையும் முன்னேறுவது போலும் ,நம் வாழ்க்கை மட்டும் இருந்த இடத்தில் இருப்பது போலவும் நமக்கு நிறைய சங்கடங்கள் ஏற்ப்படக்கூடும்.
கால ஓட்டத்திற்கு ஏற்றார் போல் நம்முடைய வாழ்க்கை நகர முடியாத ஒரு காலகட்டத்தில் கஷ்டமான
சூழ்நிலையில் இருக்கிறதே, என்று பலரும் .மனம் குழம்பிக் கொண்டிருப்பார்கள்.
அந்த மனக்குழப்பத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய கோவில் தான் ஜம்புகேஸ்வரர் கோவில்.நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியில் கந்தகிரி மலையில் உள்ளது. அங்கு தான் இந்த ஜம்புகேஸ்வரர் நாம் தரிசிக்க வேண்டும்.
மலையில் அமைந்து இருப்பதால் நாம் மலை ஏறும் போதே அங்கு வீசும் காற்றும் சூழ்நிலைகளிலும் நம் மனதை பாதி லேசாக்கி விடும்.
மேலும், இந்த மலையில் ஒரு சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த சிவ பக்த்தர் எப்பொழுதும் சிவ பெருமானை நினைத்து தியானத்தில் இருப்பவர்.
ஆனால், இந்த சித்தரை அந்த ஊர் மக்கள் ' வெறி கோவிந்தர்' என் அழைப்பர் அதாவது இவர் சிவ தவத்தில் ஆழ்ந்து இருப்பவர். அதனால் இவர் அருகில் யாராவது சென்றால் வெறி பிடித்தவர் போல் ஆகிவிடுவார் .
சிவன் மேல் அவ்வளவு அன்பு பக்தி கொண்டவர். ஆனால் யாரிடமும் பேசாத இவர் என்றாவது ஒருநாள் ஒரு சிலரை அழைத்து பேசுவார்.
அந்த நாளில் இருந்து அந்த அழைத்து பேசிய நபருடைய வாழ்க்கை மேம்பட்டு நல்ல திருப்பம் உண்டாகி விடும் என்று கூறுகின்றனர். அவர் ஜீவசமாதியான அந்த மலையில் தான் இந்த ஜம்புகேஸ்வர் உள்ளார்.
இந்த மலையை ஏற துவங்கிதும் வலப்புறத்தில் சிவன் தியானத்தில் இருக்கும் காட்சியை காணலாம். எங்கு பார்த்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியாக பசுமையாக இந்த மலை காணப்படும்.
அதற்கு பின் சில படிகள் ஏறியதும் கண்ணப்ப நாயனாரை கண்குளிர தரிசனம் செய்யலாம். இங்கு கண்ணப்பநாயனாரின் சிவபக்தியையும் நாம் சொல்லி ஆக வேண்டும்.
நாம் யாராவது எதாவது கேட்டாலே கொடுக்க தயங்கும் உலகத்தில், சிவன் மீது பற்று வைத்த அவர் சிவன் கண்களில் இருந்து ரத்தம் வழிந்ததும் மனம் பொறுக்காமல் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணையே எடுத்து கொடுக்க முன் வந்தவர். அது அல்லவா பக்தியின் உச்சக்கட்டம் . சிவத்தொண்டினால் காலத்தை தாண்டி நிற்பவர் கண்ணப்பர்.
இப்படியாக பலரையும் தரிசித்து 39 படிகளை கடந்தும் சிறு குகை நமது கண்களுக்கு தென்படும். அங்கு கிழக்கு நோக்கி இருப்பவர்தான் நாம் தேடி வந்த ஜம்புகேஸ்வரர் .
என்னவென்று விவரிக்க முடியாத அமானுஷ்யமும் தெய்விகமும் சூழ்ந்து இருக்கும் இடம் அது. அங்கே சென்றவுடன் மனதில் உள்ள சுமைகள் இறங்கிவிடும்.
படி ஏறி வந்த களைப்பும் கலைந்து விடும்.பிரதோஷம் மற்றும் மஹாசிவராத்திரி ,பங்குனி உத்திரம் நாளில் நாம் ஜம்புகேஸ்வரை தரிசிப்பது சிறந்தது,
இப்படியாக இயற்கையும் இறைவனும் நமக்காக நாம் வாழும் சூழல் அமைதியாக இருக்க அதற்கான பலன்கள் பதில்கள் கொடுத்து இருக்கிறார். நாம் தான் அதை தேடிக்கொண்டு நம் வாழும், இந்த சிறிது நாட்களில் வாழ்வை செம்மையாக்க வேண்டும், அப்படித்தான் இந்த ஜம்புகேஸ்வர் ஆலயமும் இங்கு சென்று வர மன குழப்பம் மன நிம்மதி கிடைக்க பெருவோம்.