நாய்களுக்கு மரணம் நெருங்கும் பொழுது இப்படி நடந்து கொள்ளுமாம்.. உஷாராக இருங்கள்
பொதுவாக, வீடுகளில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணியான நாய் வீட்டின் உரிமையாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும். அப்படியாக, மனிதர்களைப் போல் நாய்களுக்கும் மனரீதியாக, உடல் ரீதியாக நிறைய மாற்றங்கள்உருவாகிறது.
அதாவது, நம்முடைய வளர்ப்பு பிராணியான நாய் உடல்நலை சரியில்லாமல் உயிரிழக்க நேருகிறது என்றால் அதற்கு முன்பாக சில அறிகுறிகளை நமக்கு காட்டுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
தனிமை விரும்புதல்:
நாய்களும் மனிதர்களைப் போல் மரணத்தை உணர்ந்து கொள்ளக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால், நாய்களின் உடலில், ஆற்றலில், சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களை அவை நன்றாக உணர்கின்றன.
ஒரு வேலை நாய்களுக்கு கடுமையான நோய் தாக்குதல் அல்லது முதுமையின் காரணமாக வாழ்வின் இறுதி கட்டத்தை நெருங்குகிறது என்றால் அவர்களுடைய நடத்தையின் சில மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

அந்த வகையில், ஒரு நாய் அதனுடைய இறுதி கட்டத்தில் இருக்கிறது என்றால் அது வழக்கத்தை விடவும் அதிகமாக உறங்க தொடங்குகிறது. குறிப்பாக மிகவும் அமைதியான மற்றும் தனிமையான இடங்களை தேர்ந்தெடுத்து இருக்க விரும்புகிறது.
இவ்வாறான நேரங்களில் நாய்கள் சுறுசுறுப்பாக ஓடுவதும் நடப்பதும் விளையாடுவதும் ஆங்காங்கே சுற்றி திரிவதும் குறைந்துவிடும்.
உரிமையாளரின் அன்பை அதிகம் நாடுதல்:
அதனுடைய உலகம் மெதுவாக சுருங்க தொடங்குகிறது. சில நாய்கள் அவர்களுடைய உரிமையாளர்களை விட்டு பிரிய மனம் வராமல் அவர்களை பின்தொடர்ந்து கொண்டே இருக்கும்.
எப்பொழுதும் உரிமையாளர்களின் அருகில் இருப்பது அவர்களுக்கு நிம்மதியை கொடுப்பது போல் உணரும். இது உணர்ச்சி ரீதியாக பாதுகாப்பை தேடக்கூடிய ஒரு முயற்சியாகும். ஒரு நாய் இறுதி கட்டத்தில் இருக்கிறது என்றால் உணவு தண்ணீர் மீது அதனுடைய ஆர்வம் குறைந்து விடும்.
மெதுவாக, அதனுடைய நடத்தையில் நாம் மாற்றத்தை உணரலாம். அதைப்போல் அவை ஒரு வசதியான இடம் தேர்ந்தெடுத்து அங்கேயே அதிக நேரம் செலவிட விரும்புகிறது. யாராவது அதனுடைய பெயரைச் சொல்லி அழைத்தாலோ அல்லது சத்தம் போட்டு கூப்பிட்டாலோ தடவி கொடுத்தாலோ அதிக நேரம் எடுத்துக்கொண்டு பதில் அளிக்கிறது.
வாழ்க்கையின் இவ்வாறான காலகட்டங்களில் ஒரு சில நாய்கள் தனிமையில் விரும்புகிறது. ஒரு சில நாய்கள் தங்களுடைய உரிமையாளரின் அருகிலே இருக்க ஆசைக்கொள்கிறது. காரணம் அவர் இருக்கும் பொழுது பதட்டம் ஆகிய உணர்வுகள் குறைந்து அமைதியை உணர்கிறது.

உரிமையாளர் என்ன செய்யவேண்டும் :
இந்த மாற்றங்கள் நாய்கள் உடைய உரிமையாளர்களை அச்சப்படுத்தவோ அவர்களை காயப்படுத்துவதற்காகவும் அல்ல மாறாக நாய்களின் உடலும் மனமும் மாறிக்கொண்டிருப்பதை உரிமையாளர்களுக்கு தெரிவிக்க கூடிய ஒரு மென்மையான சைகைகளாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறான காலகட்டங்களில் உரிமையாளரின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது.
அவர்களின் அன்பு நாய்க்கு அதிகம் தேவைப்படுகிறது. ஆதலால் அந்த நேரத்தில் நாம் அன்பு, பொறுமை, மென்மையான கவனிப்பு என்று அவற்றுடன் நேரம் செலவழிப்பது என்பது நாய்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் பாதுகாப்பும் உணர்வையும் கொடுக்கிறது.
ஆக, மனிதர்கள் முதல் விலங்குகள் வரை எல்லோரும் ஒருநாள் மரணத்தை தழுவ வேண்டிய நிலை வருகிறது. அதனால் உங்கள் வீடுகளில் இருக்கக்கூடிய செல்லப் பிராணியான உங்களுடைய வளர்ப்பு நாய் மரணம் என்கின்ற இறுதி நொடியை தழுவிக் கொண்டிருக்கிறது என்றால் முடிந்த அளவிற்கு அதனுடன் நீங்கள் நேரம் செலவிடுவதும் அதற்கு அன்பையும் பாதுகாப்பையும் கொடுப்பது அவசியமாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |