வீட்டில் சிலந்தி வலை இருந்தால் ஏற்படும் தீமைகள்
குடும்பத்தில் சில பிரச்னைகளுக்கு காரணம் நமக்கே தெரியாமல் நாம் சில விஷயங்கள் வீட்டில் கவனிக்காமல் விடுவதே ஆகும்.
அதில் முக்கியமான ஒன்று சிலந்தி வலை வீட்டில் பின்னுவது.நம் கண்ணனுக்கு தெரியாத இடத்தில் அந்த சிலந்தி வலை பின்னியிருப்பதை பார்க்கமுடியும்.
அப்படியாக வீட்டில் சிலந்தி வலை பின்னியிருக்க நம் வீட்டில் பண கஷ்டங்கள் உருவாகும். நம் வீடுகளை முடிந்த அளவு சுத்தமாக வைத்தால் மட்டுமே மகாலட்சுமி அங்கு நிறைந்து இருப்பாள்.
வீட்டில் நூலாம்படை ஒட்டடைகள் இருக்க அதை உடனே சுத்தம் செய்வது நல்லது. ஏன் என்றால் நம் வீட்டில் தீய சக்திகள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் கொடுக்க நேரிடும். நம் வீட்டை எவ்வளவு சுத்தமாக வெளிச்சமாக வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நன்மைகள் நம் வீட்டில் நடக்கும்.
வீட்டில் ஜன்னல்களில் இருக்கும் தூசியையும் அகற்றி விடவேண்டும்,தூசி படிய வீட்டில் செல்வ வளங்கள் குறைந்து கொண்டே போகும்.
மேலும் நம் வீட்டில் சமையல் அறையும் சுத்தமாக வைத்து கொள்வது சாஸ்திர ரீதியாகவும் ,ஆரோக்கிய ரீதியாகவும் நன்மையை தரும்.
மேலும் நம் அரிசி மற்றும் பருப்புகள் போட்டு வைக்கும் ஜாடிகள் சுத்தமாக வைப்பது அவசியம்.ஏன்னெனில் அதில் பூச்சிகளை வர குடும்பத்தில் சண்டையும் பண தட்டு பாடு வருவதற்கான அறிகுறியாக இருக்கும்.
ஆதலால் சுத்தமாக வீட்டை வைத்து தினம் மறவாமல் விளக்கு ஏற்ற வீட்டில் உள்ள பிரச்சனைகள் படி படியாக குறைந்து லட்சுமி கடாக்ஷம் பெருகும் .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |