ஆகாசகங்கை பால ஆஞ்சநேயருக்கு செந்தூர அர்ச்சனை
திருப்பதி மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் அவதரித்ததாக கருதப்படும் ஆகாசகங்கை குகையில் பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருமலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் ஒரு பகுதியாக, ஆகாசகங்கையில், தாய் அஞ்சனா தேவியுடன் கூடிய ஸ்ரீ பால ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் நிறைவு நாளான நேற்று சிறப்பு அபிஷே ஆராதனை நடைபெற்றறு பால ஆஞ்சநேயருக்கு பிடித்தமான செந்தூர அர்ச்சனை நடைபெற்றது.
பின் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ பால ஆஞ்சநேயருக்கு புஷ்பார்ச்சனை மற்றும் துளசி அர்ச்சனை நடைபெற்றது.
பின்னர் பால ஆஞ்சநேய சுவாமிக்கும், சுதர்சன சக்கரத்துக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |