சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்: நோய்கள் தீர்க்கும் அற்புத ஆலயம்!

By Aishwarya Oct 13, 2025 08:20 AM GMT
Report

புராண சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சைவ திருத்தலங்கள் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் தனி சிறப்புமிக்க ஒரு ஆலயம் ஆகும்.

வைத்தீஸ்வரன் என்ற பெயருக்கு ஏற்ப இங்கு அருள் பொய் சிவபெருமான் தன் அடியவர்களின் நோய் தீர்க்கும் மருத்துவராக விளங்குகிறார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த கோயில் தேவாரம் பாடிய மூவரால் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றாகும்.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்: நோய்கள் தீர்க்கும் அற்புத ஆலயம்! | Sirkazhi Vaitheeswaran Temple

செவ்வாய் தோஷம், குழந்தை பாக்கியம் மற்றும் சகல நோய்களுக்கும் இங்கு வந்து வழிபடுவது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும், மேலும் இது நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

தல வரலாறு:

வைத்தீஸ்வரன் கோயிலின் வரலாறு பல யுகங்களுடன் தொடர்புடையது.

முருகன் வைத்தியம் பெற்ற கதை: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகப்பெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக சண்டையிட்டபோது அவர் உடலில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்காக சிவபெருமானை நோக்கி இங்கு வந்து வழிபட்டார்.

தென்னிந்தியாவின் துவாரகை.. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்!

தென்னிந்தியாவின் துவாரகை.. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்!

சிவபெருமான் முருகனின் காயங்களை குணப்படுத்தியதோடு பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் வைத்தீஸ்வர சுவாமி என்ற திரு நாமத்துடன் இத்தாலத்தில் எழுந்தருளினார்.

சடாயு மோட்சம்: ராமாயண காலத்தில் இராவணனுடன் சண்டையிட்டபோது படுகாயம் அடைந்த சடாயு ராமபிரானின் உதவியுடன் இத்தலத்தில் தான் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. சடாயுவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடம் இங்கு உள்ள ‘சடாயுகுண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குண்டத்தில் உள்ள சாம்பலை பூசினால் நோய் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்: நோய்கள் தீர்க்கும் அற்புத ஆலயம்! | Sirkazhi Vaitheeswaran Temple

சித்தாமிர்த தீர்த்தம்: இங்குள்ள திருக்குளத்தின் பெயர் சித்தாமிர்த தீர்த்தம். தேவர்களின் தலைவனான இந்திரன் ஒரு சாபத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது இத்தளத்தின் குளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி நோய் நீங்கப் பெற்றார். இந்த தீர்த்தத்தில் உள்ள மண் திருச்சாந்துருண்டை என்ற பெயரில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை உட்கொண்டால் நோய் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

அம்பாள் தையல்நாயகி: அம்பாள் இத்தலத்தில் தையல்நாயகி என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். மருத்துவ உபகரணங்களுடன் நோய்களை குணப்படுத்த தயாராக இருக்கும் நிலையில் அம்பாள் காட்சி தருவது தனிச்சிறப்பு.

தல அமைப்பு:

வைத்தீஸ்வரன் கோயில் திராவிட கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  

பச்சையம்மன் கோயில்கள்... வரலாறும் பெருமைகளும்..!

பச்சையம்மன் கோயில்கள்... வரலாறும் பெருமைகளும்..!

கோயில் பிரகாரம் மற்றும் கோபுரங்கள்: கோயில் பெரிய மதிலால் சூழப்பட்டுள்ளதுடன் மூன்று பிரகாரங்களை கொண்டுள்ளது. கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜ கோபுரம் மிகவும் பெரியது. இதில் புராண காட்சிகளின் சுதை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பிரதான சன்னதிகள்:

மூலவர்: வைத்தீஸ்வர சுவாமி லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

அம்பாள்: தையல்நாயகி என்ற பெயரில் மூலவர் சன்னதியின் வலது புறத்தில் தனி சன்னதியாக அமைந்துள்ளார்.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்: நோய்கள் தீர்க்கும் அற்புத ஆலயம்! | Sirkazhi Vaitheeswaran Temple

முத்துக்குமாரசுவாமி: முருகப்பெருமான் இங்கு முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் பிரதானமாக வீற்றிருக்கிறார். இது தமிழ்நாட்டில் உள்ள முருகன் அறுபட வீடுகளைப் போலவே சிறப்பிக்கப்படும் ஒரு தலமாகும்.

அங்காரக சன்னதி: நவகிரங்களில் ஒருவரான செவ்வாய் இத்தல்த்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிப்படவும் அங்காரகனுக்குரிய பரிகாரங்களை செய்யவும் இந்த தலம் மிகவும் உகந்ததாக உள்ளது.

நவக்கிரகங்கள் அமைப்பு: மற்ற கோயில்களில் இருந்து வேறுபட்டு இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது நோய்களை விரைந்து நீக்கி, நல்வாழ்வை அருளும் அமைப்பு என்று நம்பப்படுகிறது.

வரங்களை அள்ளி கொடுக்கும் குடியாத்தம் கங்கை அம்மன்

வரங்களை அள்ளி கொடுக்கும் குடியாத்தம் கங்கை அம்மன்

திருவிழாக்கள்:

இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடந்தாலும் சில முக்கியமான திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

பங்குனி உத்திரம்: இது இத்தலத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். மாசி மாத இறுதியில் தொடங்கி பங்குனி மாதத்தில் முடிவடையும் இந்த திருவிழாவில் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வீதி உலாக்கள் நடைபெறும்.

தைப்பூசம்: முருகப் பெருமானுக்கு உகந்த இந்த திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில்: நோய்கள் தீர்க்கும் அற்புத ஆலயம்! | Sirkazhi Vaitheeswaran Temple

கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்: கார்த்திகை மாதத்தில் வைத்தீஸ்வர சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி: முருகப் பெருமானுக்குரிய விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் சடாயு மோட்சம் விழா: ராமாயணத்தில் சடாயு மோட்சம் அடைந்ததை நினைவுபடுத்தும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது.

வழிபாட்டு நேரம்:

வைத்தீஸ்வரன் கோயிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பொதுவான வழிபாட்டு நேரமாக, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் திறந்து வைக்கப்படுகிறது.

வைத்தியத்தின் கடவுளாக சிவபெருமான் அருள் பாலிக்கும் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் உடல் மற்றும் மனப் பிணிகளை நீக்கி பக்தர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை அருளும் அருள் மிகுந்த தலமாக விளங்குகிறது.

சிவபெருமானின் கோபத்தை தணித்த வெக்காளியம்மன் கோயில்: வரலாறும் சிறப்புகளும்.

சிவபெருமானின் கோபத்தை தணித்த வெக்காளியம்மன் கோயில்: வரலாறும் சிறப்புகளும்.

முத்துக்குமாரசுவாமி, தையல்நாயகி அம்பாள், மற்றும் அங்காரகனுடன் சிவபெருமான் இங்கு அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பை பன்மடங்கு கூட்டுகிறது.

நோய் நீங்கவும், செவ்வாய் தோஷம் நீங்கவும், நாடி ஜோதிடத்தை பார்க்கவும் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US