சித்திரை மாதத்தின் சிறப்புக்கள்
பங்குனி மாதம் முடிந்து சித்திரை பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தை ஒரு ஆன்மீக மாதம் என்றே குறிப்பிடலாம்.
இந்த சித்திரை மாதத்தில் நிறைய ஆன்மீக நிகழ்வுகள் நடந்ததாக புராணங்கள் கூறுகிறது.
நாம் பெரியபுராணம் பற்றி அறிந்திருப்போம். சிவமே தவம் என்று வாழ்ந்த நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் பெரிய புராணத்தை சித்திரை மாதத்தில் தான் சேக்கிழார் திருவாதிரை நாளிலே தொடங்கி அடுத்த சித்திரை திருவாதிரை வரை முடித்து அருளினார்.
மேலும், திரு ஞானசம்பந்தர் திருப்பதிகம் அருளிச் செய்ய தொடங்கியதும் சித்திரை திருவாதிரை நாளில் தான்.
"எண்ணுகேன் என சொல்லி "என்று அப்பர் பதிகம் பாடி இறைவன் திருவடியை அடைந்ததும் சித்திரை சதய நாளில் தான்.
மேலும், ராமானுஜர் அவதரித்ததும் சித்திரை திருவாதிரை நாளில் தான்.
மதுரை கவி ஆழ்வார், நடாதூர் அம்பாள் ,உய்யக்கொண்டார் போன்ற வைணவ ஆச்சாரியார்கள் உமாபதி சிவாசாரியார் இசைஞானியார்,
திருக்குறிப்பு தொண்ட நாயனார், திருநாவுக்கரசர் ,சிறுதொண்ட நாயனார் மங்கையர்கரசியார், விரல்மிண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் திரு நட்சத்திரங்களும் சித்திரை மாதத்தில் தான் வருகின்றன.
மேலும், இந்த சித்திரை மாதத்தில் தான் மதுரை ஆண்ட நாச்சியார் அம்மா மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விழாவும், கள்ளழகர் ஆற்றில் இறங்கி சேவை சாதிக்கும் வைபவமும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகவும் நடைபெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |