பாவங்கள் போக்கும் சிவலிங்க வழிபாடு
சிவனை நினைத்தாலே முக்திபிறக்கும்.அப்படியாக ஒவ்வொரு சிவ லிங்கம் வழிபடுவதால் ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்.அதை பற்றி பார்ப்போம்
1. ஆற்று மணலால் சிவ லிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம்.
2. புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட முக்தியைப் பெறலாம்.
3. பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் விரும்பிய பொருள் சேரும்.
4. சந்தன லிங்கம் செய்து வழிபட அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.
5.திருநீறு லிங்கம் ( விபூதி லிங்கம்) வைத்து வழிபட எல்லா வித செல்வங்களும் குவியும்.
6. மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ் நாள் கிடைக்கும்.
7. அரிசி மாவால் சிவ லிங்கம் செய்து வழிபட உடல் வலிமை பெறும்.
8. சோறு லிங்கம் (அன்னம் லிங்கம்) செய்து வழிபட உணவுப் பற்றாக்குறை நீங்கும்.
9.பழங்களால் லிங்கம் செய்து வழிபட சிறப்பான இன்பமான வாழ்வு அமையும்.
10. தயிர் லிங்கம் நற்குணத்தைத் தருவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |