சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் பற்றி தெரியுமா?
நம் வாழ்க்கையில் இன்றியமையாதது இந்த பஞ்சபூதங்கள் ஆகும்.அப்படியாக ஒரு பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இந்த பஞ்சபூதம் மிக அவசியம் ஆகிறது.
நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய ஐந்தையும் பஞ்ச பூதங்கள் என்கிறோம்.
மனிதனின் உடல் இயக்கத்திற்கு பஞ்சபூதங்களின் இயக்கம் இன்றியமையாதது. பொதுவாக ஐந்து என்ற எண் சிவ பெருமானுடனும், மனிதர்களின் வாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது.
அதில் பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன அதை பற்றி பார்ப்போம்.
1. ஆகாயம்-சிதம்பரம் நடராசர் திருக்கோயில்
2.நிலம்-காஞ்சிபுரம்-ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
3. நீர் திருவானைக்காவல்-ஜம்புகேசுவரர் திருக்கோயில்
4.நெருப்பு-திருவண்ணாமலை-அண்ணமலையார் திருக்கோயில்
5. காற்று-திருக்காளத்தி-காளத்தீசுவரர் திருக்கோயில்
சிவ பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலை இப்பஞ்சபூத தலங்களில் வீற்றிருந்து முறையே செய்கிறார் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |