ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட சிவன் கோவில்: எங்கு உள்ளது?

By Yashini Jul 05, 2024 01:30 PM GMT
Report

விழுப்புரம் அடுத்து 10km தொலைவில் அமைத்துள்ளது ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில்.

இதனுடன் ஸ்ரீ முத்தாம்பிகை அம்மனும் உடன் இந்த கோயிலில் இருக்கிறார்.

இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு, என்னவென்றால், ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட ஆலயம் என பெயர் கொண்டதாகும்.  

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட சிவன் கோவில்: எங்கு உள்ளது? | Siva Temple With Small Entrance In Viluppuram

இந்த ஊரின் பெயரும் ஒரு கோடிதான். மேலும் இந்த அம்மனை, ஓலை படித்த நாயகி எனவும் அழைப்பார்கள்.

இந்த ஆலயத்தை ஒரு கோடி சித்தர் வழிபட்ட, முத்தாம்பிகை உடனுறை ஸ்ரீ அபிராமேஸ்வவர், ஸ்ரீ ஓலை படித்த நாயகி உடனுறை கோடி கொடுத்த நாதர் ஆலயம் என்றும் அழைப்பார்கள்.

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட சிவன் கோவில்: எங்கு உள்ளது? | Siva Temple With Small Entrance In Viluppuram

2000 வருடம் பழமைவாய்ந்த கோவிலான, இந்த கோடி கொடுத்து நாதரை தரிசிக்க பக்தர்கள் பலரும் வருகை தருகிறார்கள். மேலும், இது உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட கோயில் ஆகும்.  

கோயிலில் சிறிய துவாரம் வழியாகவே சிவலிங்கத்தை காண முடிகிறது. பூஜை செய்வதற்கு இன்னொரு வழி இருக்கிறது அதில் சென்றால் சிவலிங்கத்தை நேரில் காணலாம்.

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட சிவன் கோவில்: எங்கு உள்ளது? | Siva Temple With Small Entrance In Viluppuram

வாசலில் இருந்து நேராக பார்க்கும்போது அம்மன் சிலை தெரியும். இந்த சிறப்பு காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US