வீரம் விளைந்த சிவகங்கை மாவட்டத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள்
வீரத்திற்கும் பாசத்திற்கும் பெயர் போன சிவகங்கை மாவட்டம் தமிழ்நாட்டில் முக்கிய இடமாக காணப்படுகிறது.சிவன் நடத்திய பல திருவிளையாடல்கள் ஆன மதுரை மாநகரத்தின் அருகாமையில் அமைந்த சிவகங்கையும் ஆன்மீகத்தில் எந்த ஒரு அளவிலும் சலித்தது இல்லை.
சிவகங்கையில் திரும்பும் திசையில் ஒவ்வொரு அற்புதம் நிறைந்த கட்டிட கலை கொண்ட கோயில்கள் சூழ்ந்து இருக்கிறது.இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய கோயில்களும் அதனின் வரலாறுகள் பற்றியும் பார்ப்போம்.
மதுரை வரை ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் கட்டாயம் சிவகங்கை இந்த கோயில்களை மறக்காமல் தரிசனம் செய்ய புது அனுபவம் கிடைக்கும்.இன்னும் சொல்ல போனால் ஆன்மீக பயணமாக சிவகங்கை மட்டும் என்றே தனி சுற்றுலா அமைத்து சென்று வரலாம்.அத்தனை சிறப்புக்கள் வாய்ந்தது இந்த மண்ணும் கோயிலும்.
1. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேக்கிழார் கோயில் என்று அழைக்கப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் உரிய கோயிலாகும்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியான சிறப்புக்கள் கொண்ட கோயிலாக இக்கோயில் வணங்க படுகிறது.
இந்த ஆலயம் சேக்கிழார் பெருமானுடைய மிகுந்த தொடர்புடையது.1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த கோவில், அதன் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.
சிவ பக்தர்களின் போற்றி கொண்டாடும் தன்னுடைய கண்களாக கருதும் “பெரியபுராணம்” எழுதிய சேக்கிழருடன் இக்கோயில் தொடர்புடையது. கோயிலின் இரண்டு முக்கிய கோபுரங்களில் (ராஜகோபுரங்கள்) மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் இருவரும் தனித்தனியாக சித்தரிக்கப்படுவது கோயிலின் தனிச்சிறப்பு.
சிலருக்கு திருமணப் என்று பேச்சு தடங்கல் ஏற்பட்டு விடும்.அதில உள்ள தடைகள் நீங்கி குழந்தை வரம் வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.ஆக இத்தனை விஷேசம் கொண்ட கோயிலை நாம் தரிசிக்க நாம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நடக்கும்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் 9 மணி வரை
இடம்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை,சிவகங்கை மாவட்டம் – 630302.
2.கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி
விநாயகர் என்றாலே பிள்ளையார் பட்டி தான் பிரபலம்.அக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைய பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாகும்.அதாவது ஒன்பது கோள்கள்களும் ஒன்றை காண பிள்ளையார் பட்டி வரவேணும் என்ற பாடல் ஒன்றும் இருக்கிறது.
ஸ்வாமியின் பெயரே ஊருக்கு அமைந்து இருக்கும் பொழுதே நாம் அந்த ஊரின் பெருமையும் விநாயகரின் அருமையையும் தெரிந்து கொள்ளலாம்.வலிமை மற்றும் ஞானத்தின் அடையாளமாக, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, அற்புதமான விநாயகர் சிலைக்காக இந்த கோவில் புகழ்பெற்றது.
தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றான இக்கோயில் காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார்.
இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுவது சிறப்பாகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலா கலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இங்கு 3 லிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
இடம்
பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.
3.அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கோயில்,சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில சிவன் விஷ்ணு என்று சிறந்த கோயில்கள் இருக்கிறது.அதில் பெருமாள் பக்தர்களுக்கான சிறந்த கோயிலாக விளங்கக்கூடியது அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கோயில்.இங்கு வீற்றி இருக்கும் பெருமாள், இடது கையால் நம்மை வர வழைத்து வலது கையால் அருள்பாலிக்கிறார்.
இந்த பெருமாளை, சிற்ப சாஸ்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பு உள்ள முறைப்படி, உளி கொண்டு செதுக்காமல் கல்லையே கொண்டு செதுக்கி வடிவமைத்து உள்ளார்கள். பெருமாள் செல்வத்துக்கு அதிபதி. ஆனால், இத்தலத்து உள்ள பெருமாள் கல்வி, செல்வம் இரண்டிற்குமே அதிபதியாக உள்ளார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரும், காளமேகப்புலவரும் இவரை வணங்கி, தங்களது புலமை மேலும் சிறக்குமாறு வழிபட்டு சென்றுள்ளதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.
இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, பண்டிதராகவும் விளங்குகிறார்கள்.
கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில், வேம்பத்தூர் – 630 565. சிவகங்கை மாவட்டம்.
4.அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை
இத்தலத்தில் பெருமாள் மதுரை அழகர் கோயிலைப் போலவே ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் இக்கோயிலை 13 ஆம் நூற்றாண்டில் மாவலி வாணாதிராயர் மன்னரால் கட்டப்பட்டது.
இந்த மன்னன் தினமும் மதுரை சென்று அழகரை தரிசிப்பது வழக்கம் கொண்டு இருந்திருக்கிறார்.ஒரு சமயம் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அவர் தினமும் மதுரை சென்று அழகரை தரிசிக்க முடியவில்லை என்று மனம் வருந்தி இருக்கிறார்.
இதனால் பெருமாளிடம் முறையிட்ட்டார் மன்னன். திருமாலும் மன்னன் முன் தோன்றி மானாமதுரையிலேயே அழகர்கோயிலைப் போலவே ஒரு கோயில் கட்டி வழிபடுமாறு கூறினார். இக்கோயிலில் வழிபட்டால் மதுரை அழகர் கோயிலில் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்றும் கூறினார்.
மேலும் ஒரு எலுமிச்சையை வைகை ஆற்றில் விட்டு அது ஒதுங்கும் இடத்தில் கோயில் கட்டுமாறும் கூறினார். எலுமிச்சையின் ஒரு பகுதி கோயில் உள்ள இடத்திலும் மற்றொரு பகுதி 4 KM தொலைவிலும் கரை ஒதுங்கியது. அதனால் இக்கோயிலின் குளம் 4 KM தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வடை மாலை ஒரு மாதமானாலும் கெடாது என்பது சிறப்பாகும்.
வழிபாட்டு நேரம்
காலை 7.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
இடம்
அருள்மிகு வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
5.அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், அரியாக்குறிச்சி
காளி என்றாலே உக்ரமானவள் என்று தான் எல்லோருடைய அபிப்ராயம் இருக்கும்.ஆனால் உண்மையில் காளி தாய்க்கு நிகரானவள்.பல மாவட்டங்களில் காளி கோயில் இருந்தாலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான காளி இருக்கிறது.
இங்கு காளி தனது வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி வெட்டுடையா காளி என்ற நாமத்தில் காட்சி கொடுக்கிறாள்.பொதுவாக மனிதன் பல வகையில் பாதிக்க படுகிகின்றான்.
அப்படியாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் அய்யனாரும் வெட்டுடையா அய்யனார் என்ற பெயரில் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
மேலும் பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு’ என்னும் பிரார்த்தனை செய்தால் மீண்டும் சேர்ந்து விடுவர் என்பது நம்பிக்கை.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
இடம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |