தமிழ் புத்தாண்டு 2025: மகிழ்ச்சி உண்டாக சொல்ல வேண்டிய சிவன் மந்திரம்
தமிழ் மாதம் 12 மாதங்கள் முடிந்து புது வருடம் பிறக்க உள்ளது. அதாவது நாளை ஏப்ரல் 14,2025 அன்று சித்திரை வருடப்பிறப்பு பிறக்க உள்ளது. இந்த வருடம் சித்திரை வருட பிறப்பு திங்கட்கிழமையோடு சேர்ந்து வருவது மிக சிறந்த பலனை கொடுக்கும்.
திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய நாள், மேலும் சித்திரை வருடப்பிறப்பு சுவாதி நட்சத்திரத்தோடு சேர்ந்து வருவதால் அன்றைய தினம் நரசிம்மரை வழிபாடு செய்வதும் சிறந்த பலன் கொடுக்கும்.
அப்படியாக, நாளை சித்திரை வருடப்பிறப்பு அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
மனிதர்கள் நாம் தினமும் புதிய மாறுதல்களையும், மாற்றத்தையும் தேடி கொண்டு இருக்கின்றோம். அதாவது, இந்த மானிட வாழ்வில் நாம் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை. சந்திக்கும் பிரச்சனைகளை இறைவன் நாமம் சொல்லி மனதார கடந்தாகவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
மேலும், இந்த பிறவியில் கிடைத்த உடலும், உறவினர்களும் அடுத்த பிறவியில் கிடைக்க போவதில்லை. உடல் மாறும், இடம் மாறும் அப்படியாக, இந்த பிறவியில் நம்முடன் பயணம் செய்பவர்களை நாம் மதித்து, அன்பு செய்து, அவர்கள் நம்மை கஷ்ட படுத்தினாலும் அவர்களை மன்னித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்வது என்பது புது வருடத்தில் நல்ல தொடக்கமாக அமையும்.
அதனால், நாளை காலை எழுந்து குளித்து விட்டு அருகில் இருக்கும் சிவன் ஆலயம் சென்று சிவபெருமானை வழிபாடு செய்து குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
அதோடு, வழிபாடு செய்த பிறகு, சிறிது நேரம் ஆலயத்தில் அமர்ந்து, தியானம் செய்து மனதை ஒருநிலை படுத்தி சிவபெருமானுடைய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையை சந்திக்கலாம்.
கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே, சிவபெருமானை வழிபாடு செய்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
மந்திரம்:
"ஓம் நம சிவாய, சர்வ குபேர வசி வசி ஓம்"
இந்த மந்திரத்தை நாளை நாம் முழுமனதோடு சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ய, நம்முடைய குடும்பத்தில் உண்டான கஷ்டங்கள் எல்லாம் விலகும். அதோடு, நீண்ட நாட்களாக கடனில் சிக்கி இருந்தாலும் அந்த கடன் நீங்கி, செல்வம் செழிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |