நாளைய ராசி பலன் (20-01-2026)

Report

மேஷம்:

பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் யாவும் விலகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நன்மையான நாள்.

ரிஷபம்:

சிலருக்கு வாழ்க்கையை பற்றிய குழப்பங்கள் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்து முடிவு செய்யுங்கள். நட்பு வட்டாரம் விரிவடையும் நாள். கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதியம் மேல் உடல் சோர்வு உண்டாகலாம்.

ஒருவரை பழிவாங்கும் வரை இவர்கள் விடமாட்டார்களாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

ஒருவரை பழிவாங்கும் வரை இவர்கள் விடமாட்டார்களாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

கடகம்:

இன்று வீண் போட்டி பொறாமைகளை விட்டு விடுங்கள். மனதில் குழப்பங்களும் வீண் பயமும் உண்டாகும். சிலருக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் மதியம் மேல் வரலாம். குழப்பம் நிறைந்த நாள்.

சிம்மம்:

இன்று முக்கிய நபரை சந்திப்பீர்கள். வீடுகளில் இருந்த குழப்பங்கள் எல்லாம் விலகும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள். நீண்ட நாளாக நினைத்த விஷயம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

கன்னி:

இன்று வேலை பளு அதிகரிக்கும். வெளியே செல்லும் பொழுது நீங்கள் உங்கள் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் இறைவழிபாட்டில் பங்கு கொள்வீர்கள்.

துலாம்:

இன்று உங்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் விலகும். சிலருக்கு வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத நபரை சந்திக்கும் நிலை வரலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.

விருச்சிகம்:

தேவை இல்லாத வார்த்தைகளை நீங்கள் பயன் படுத்தாதீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தந்தைக்கு மருத்துவ செலவு உண்டாகலாம். கவனம் வேண்டும்.

தீராத துன்பம், வறுமை நீங்கள் பாட வேண்டிய சக்தி வாய்ந்த திருப்புகழ்

தீராத துன்பம், வறுமை நீங்கள் பாட வேண்டிய சக்தி வாய்ந்த திருப்புகழ்

தனுசு:

பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை பற்றி o=பயம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பிற்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதியம் மேல் வீட்டிற்கு விருந்தினர் வரலாம். நன்மையான நாள்.

மகரம்:

நீண்ட யோசனை பிறகு முக்கியமான விஷயம் ஒன்று செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை.

கும்பம்:

திருமண வரன் தேடுவதில் சில குழப்பங்கள் வரலாம். பெற்றோர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்:

இன்று நட்புகளை பற்றி புரிந்து கொள்ளும் நாள். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்கு சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை வரலாம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US