இதை செய்துவிட்டு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும் பாவம் தீராது

Lord Shiva Lord Ganesha Goddess Lakshmi
By Sakthi Raj Apr 25, 2024 12:00 PM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

உலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும். வாழ்க்கையில் எவற்றையெல்லாம் கடைபிடிக்க வேண்டும், எவற்றின் பக்கம் மனித மனம் செல்லக்கூடாது என்று நமது இந்து மதத்தில் பல்வேறு புராணக் கதைகள் வேத மந்திரங்கள் உபதேசங்கள் போன்றவற்றின் மூலம் நமது முன்னோர் வகுத்துள்ளனர்.

அந்த வகையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் ஒரு மாம்பழத்தால் நடைபெற்ற லீலைகள் தற்போதைய காலகட்டத்திற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

இதை செய்துவிட்டு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும் பாவம் தீராது | Sivan Parvati Amma Appa Pavam Punniyam

உலகையே ஆளும் முருகப்பெருமானுக்கு தாய் தந்தையை விட மிகப்பெரிய விஷயம் உலகில் இல்லை என்பதை விநாயகரின் மூலம் உலகுக்கு உணர்த்திய சிவபெருமானின் லீலைகள் தற்போதைய காலத்தில் தாய் தந்தையரை உதாசீனம் செய்பவர்களுக்கு உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

தாய் தந்தைக்கு வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

இதை செய்துவிட்டு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும் பாவம் தீராது | Sivan Parvati Amma Appa Pavam Punniyam

இந்த பூமியை விட பாரமானவள் தாய், ஆகாசத்தை விட உயர்ந்தவர் தந்தை , ஒருமுறை தாய் தந்தையருக்கு நமஸ்காரம் செய்தால் பசுவை தானம் செய்வதற்கான பலன் கிடைக்கிறது.

சாய்பாபா நமக்கு சொல்லும் ஏழு பொன் மொழிகள்

சாய்பாபா நமக்கு சொல்லும் ஏழு பொன் மொழிகள்


நூறு ஆச்சார்யர்களை விட தந்தை சிறந்தவர், தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள் ஜென்மாவை கொடுத்த தாய்.

அவர்களுக்கு சேவை செய்தால் ஆறு முறை பூ மண்டலத்தை ப்ரதஷிணம் செய்த பலனும் ,ஆயிரம் முறை காசி யாத்திரை செய்த பலனும் 100 முறை சமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கிறது .

இதை செய்துவிட்டு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும் பாவம் தீராது | Sivan Parvati Amma Appa Pavam Punniyam

எப்பேர்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு .பெற்ற தாய் கண்களில் இருந்தும் கண்ணிறை வரவழைத்தால், அதற்கு ஒரு லட்சம் பசங்களை தானம் செய்தாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகம் செய்தாலும் அந்த பாவம் போகாது என்று வேதங்கள் தெளிவாக கூறியுள்ளது.

ஆக தாயை விட சிறந்த தெய்வம் இல்லை .காயத்ரியை மிஞ்சிய மந்திரமும் இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US