சிவன் கோயில்களில் நாம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்

By Sakthi Raj Apr 09, 2024 04:56 AM GMT
Report

இறைவன் அவனை அடைய அவன் அருள் பெற்று வாழ்க்கையில் நலம் பெற பலரும் பல வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கின்றோம்.

அப்படியாக நாம் சிவன் கோயிலில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

சிவன் கோயில்களில் நாம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் | Sivan Temple Valipadu Plangal

சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.

பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.

சிவன் கோயில்களில் நாம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் | Sivan Temple Valipadu Plangal

ஆலயத்தில் குறைந்தது மூன்றுமுறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத் துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் வேறு எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.

இறைவனை வழிபாடு செய்ய ஆலயத்திற்கு செல்லும் பொழுது தெரிந்தவர்கள் என சிலரை சந்திக்கக்கூடும், அப்படியான வேளைகளில் நாம் ஆலயத்தின் உள் இருப்பதால் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது. அவனுக்கு மேல் ஆலயத்தில் வேர் எவரும் பெரிதல்ல.

நாம் தீபம் போடுவதுண்டு. அப்படியாக நாம் ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்.

சிவன் கோயில்களில் நாம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் | Sivan Temple Valipadu Plangal

திருமணமாகி 5ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவார்கள்.

சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும். பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம்.

செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும். சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.

பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மீக சாஸ்திரங்கள்

பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மீக சாஸ்திரங்கள்


கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பார்கள்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US