சிவனின் இந்த 12 பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்

By Yashini May 08, 2024 06:59 PM GMT
Report

வீட்டில் பூஜை செய்ய குளித்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்கவும்.

கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் , ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். பின்னர் நெய்வேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

சிவனின் இந்த 12 பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள் | Sivanin 12 Peyargalai Solli Archanai Seiyungal

சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

கோவில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்கு சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US