ஆன்மீகம்: பெற்றோர்கள் இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள்- பேராபத்து காத்திருக்கிறதாம்
குழந்தை வளர்ப்பு என்பது நிச்சயம் சாதாரண விஷயம் அல்ல. நாம் ஒரு குழந்தையை எவ்வாறு வளர்க்கின்றோம் என்பதை பொறுத்துதான் அவர்களுடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை பற்றி நாம் சொல்லிக் கொடுப்பதில் நிறைய சங்கடங்களும் சிக்கல்களும் மிக நுணுக்கமான முறையில் இருக்கிறது.
அப்படியாக பல பெற்றோர்கள் மிகக் கடினமாக அல்லது மிகவும் மென்மையாக நடந்து கொண்டால் நம் குழந்தைகள் அதற்கு தகுந்தாற்போல் மாற்றம் பெற்று விடுவார்கள் என்று நம்புவது உண்டு. ஆனால் உண்மையில் பகவத்கீதையில் ஒரு அற்புதமான கண்ணோட்டத்தை நமக்கு தெரிவிக்கிறது.
குழந்தைகளை திட்டுவதற்கும் அடிப்பதற்கும் மேலாக அவர்களுக்கு தர்மத்தை கற்றுக் கொடுத்து விட்டோம் என்றால் நாம் அவர்களை வழிநடத்த தேவையில்லை அவர்கள் சரியான வழியில் நடக்கத் தொடங்கி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக குழந்தைகளுக்கு நாம் எவ்வாறு ஆன்மீக ரீதியாக ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. தர்மம் ஏன் முக்கியமானது:
மகாபாரதம் எடுத்துக் கொண்டோம் என்றால் கிருஷ்ண பகவான் அர்ஜுனனை போரில் பங்கு கொள்வதற்கு எந்த ஒரு கடினமான தண்டனையும், கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக கிருஷ்ண பகவான் தர்மத்தின் உடைய முக்கியத்துவத்தை எடுத்து உணர்த்துகிறார்.
அதன் வழியாகத்தான் அர்ஜுனன் போரில் தைரியமாக பங்கு கொள்கிறார். ஆக குழந்தைகளுக்கு நாம் தர்மத்தை சரியான முறையில் கற்றுக் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு பயம் என்ற ஒரு உணர்வு தாண்டி ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்கள் முன் வருவார்கள்.
மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய தண்டனையானது சிறிது காலத்திற்கு அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமே தவிர்த்து தர்மத்தை நாம் அவர்களுக்கு சரியான முறையில் போதிக்கும் பொழுது அவர்கள் காலம் காலமாக அவர்கள் வாழ்க்கையை சரியாக வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2. குழந்தைகளுக்கு யாரின் உதவி அதிகம் தேவை:
உண்மையை சொல்லப்போனால் குழந்தைகளுக்கு கிருஷ்ண பகவானை போல் ஒரு நல்ல ஆசிரியர், ஒரு நல்ல நண்பன் வழி நடத்துவதற்கு தேவைப்படுகிறார்கள். குழந்தைகள் ஒரு விஷயத்தில் தவறு செய்து விடுகிறார்கள் என்றால் இது தவறு என்று சுட்டிக் காண்பித்து அடிப்பது திட்டுவதை தாண்டி அவர்களை மனம் விட்டு அவர்கள் செய்யக்கூடிய விஷயம் சரியானதா என்று ஆலோசித்து ஒரு நல்ல விடையை கொடுக்கக்கூடிய ஒரு நண்பராக நாம் மாற வேண்டும்.
குழந்தைகள் பெரும்பாலும் தவறுகளை பல நேரங்களில் மனக்குழப்பங்களின் காரணமாகத்தான் செய்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு "நீ செய்தது தவறு! சரி என்று சொல்வதைக் காட்டிலும் இவ்வாறு செய்தால் சரி இவ்வாறு செய்தால் தவறு என்று எடுத்து சொல்லி வழி நடத்துவதற்கு கிருஷ்ண பகவானை போல் ஒரு நல்ல நண்பனும் ஆசிரியரும் தான் தேவைப்படுகிறார்கள்.
ஆக குழந்தைகளுக்கு தர்மம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் எடுத்து சொல்லும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குழப்பங்கள் என்பது வருவதே இல்லை. எந்த ஒரு காரியத்தையும் நடுநிலையாக யோசித்து தர்மத்திற்காக செயல்படக்கூடிய மனப்பக்குவமும் ஆற்றலும் அவர்களுக்கு கிடைக்கிறது.
மேலும் அவர்களை சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களில் எது சரி, எது தவறு என்று சரியாக கவனித்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு தைரியமும் அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆக இங்கு மனிதனை மனிதனாக மாற்றுவதும் மனிதனை ஒரு நல்ல வழியில் கூட்டிச் செல்வதும் தர்மம் மட்டுமே. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதை கற்றுக் கொடுக்கின்றோமோ இல்லையோ தர்மத்தை கற்றுக் கொடுக்கும் பொழுது அதிலே முழு வாழ்க்கை அடங்கி விடுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |