நீங்கள் சிவ பக்தரா? அப்போ கட்டாயமாக டிசம்பர் 17ஆம் தேதியை தவற விடாதீர்கள்
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் பிரதோஷம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது எவர் ஒருவர் பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவபெருமானுடைய முழு அருள் கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற குழப்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம். அதோடு தொடர்ந்து நாம் பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொண்டு வரும் பொழுது நமக்கு மோட்சம் நிச்சயம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான கடைசி பிரதோஷ விரத தினமானது மார்கழி இரண்டாம் நாள் டிசம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் விசாக நட்சத்திரமும் இணைந்து வருவதால் அந்த நாள் இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது.
ஆக அன்றைய தினம் நாம் தவறாமல் வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல ஆசீர்வாதங்களை நாம் பெறலாம் ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியை பிரதோஷம் என்று வழிபாடு செய்து வருகின்றோம்.

இந்த நாளில் சிவபெருமான் ஆலயங்களில் நடக்கக்கூடிய பிரதோஷ பூஜை வேளையில் கலந்துகொண்டு நாம் வழிபாடு செய்தால் நிச்சயம் நம்முடைய பாவங்கள் விலகி நமக்கு ஒரு நல்ல யோகம் உண்டாகும். அதோடு பிரதோஷ நாள் அன்று சுவாமிக்கு அபிஷேகத்திற்குரிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
அல்லது வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபாடு செய்தாலும் மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். அதோடு மிக முக்கியமாக இந்த பிரதோஷ பூஜை நிகழ்வுகளில் குடும்பங்களோடு நாம் கலந்து கொள்ளும் பொழுது குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களும் விலகும்.
இவ்வாறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீடுகளில் இருந்தே அவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

அன்றைய தினம் சிவபெருமானுக்கு தயிர் சாதம், தேங்காய் சாதம், பாயாசம் போன்ற வெள்ளை நிறத்தில் பிரசாதங்களை படைத்து நெய் தீபம் ஏற்றி குடும்பங்களோடு வீடுகளில் நாம் வழிபாடு செய்தாலும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.
இந்த நாளில் மறக்காமல் சிவபுராணம் படிப்பது ஒரு நல்ல பலன் கொடுக்கும். முடியாதவர்கள் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மட்டும் மனதில் பாராயணம் செய்து கொள்ளலாம்.
ஆக இந்த வருடம் கடைசி பிரதோஷம் டிசம்பர் 17ஆம் தேதி வருகிறதால் அனைவரும் மறக்காமல் அந்த நாளில் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்து வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றங்களை பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |