பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?
ஒரு குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கும் அமைதியான சூழல் பெறவும் அந்த குடும்பத்தினுடைய பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அப்படியாக, குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்களுடைய குடும்ப நலனுக்காகவும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெறுவதற்காகவும் செய்ய வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
1. வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் மஞ்சள் அல்லது குங்குமம் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குகின்ற பொழுது லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

2. அமாவாசை கழித்து வரக்கூடிய மூன்றாம் வளர்பிறை நாட்களில் பெண்கள் அவர்களுடைய முடியை வெட்டினால் அவர்களுடைய முடி நன்றாக செழித்து வளரும்.
3. அதேபோல், பெண்கள் தங்களுடைய தலையில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தலையில் வாசனை மிகுந்த பூக்களை சுடுவதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
4. குறிப்பாக பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் ஒருவருக்கு தானம் கொடுப்பதால் அவர்களுடைய குடும்பத்தில் சிக்கல்கள் விலகி மன அமைதி கிடைக்கும். இவ்வாறான சிறிய விஷயங்களை நாம் பின்பற்றும்பொழுது நம்ம வாழ்க்கை அமைதியாக மாறும். அதே போல், இறைவனுடைய முழு அருள் கிடைத்து குடும்பத்தில் மன அமைதி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |