உங்கள் ருத்ராட்சம் உடைந்து விட்டதா? அதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சிவ பக்தர்கள் எல்லோரும் ருத்ராட்சம் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், நாம் அணிந்த ருத்ராட்சம் உடைந்து விட்டாலோ அல்லது நம் கழுத்திலிருந்து கழண்டு தொலைந்து விட்டாலோ அதை பலரும் அபசகுனமாக கருதுகிறார்கள்.
சிவபெருமான் நம் மீது கோபம் கொண்டிருக்கிறார் என்பதைப் போல் பல குழப்பங்களை கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ருத்ராட்சம் உடைந்து போனால் அதற்குரிய பலன் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
புராணங்களின், அடிப்படையில் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து தோன்றியதாக ருத்ராட்சம் என சொல்லப்படுகிறது. சிவபெருமானுடைய அம்சமாகவே கருதி நாம் அதை போற்றி வருகின்றோம்.
மேலும், ருத்ராட்சம் அணியும் பொழுது அந்த நபருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடும் மன அமைதியும் முழு பாதுகாப்பும் சிவபெருமானுடைய அருளால் கிடைக்கிறது.

ருத்ராட்சம் உடைவதற்கான ஆன்மீக காரணங்கள் :
அதாவது, திடீரென்று ருத்ராட்சம் உடைந்து போகிறது என்றால் அவர்களை சுற்றி உள்ள சூழல் மிகவும் எதிர்மறையான தாக்குதல்களை கொண்டு இருக்கலாம். ஒரு சிலருக்கு மன அழுத்தம் அல்லது தீய விளைவுகளை உள்வாங்கியதாலும் அவை உடைந்து போயிருக்கலாம்.
மேலும், ஒருவர் அணிந்த அந்த நோக்கம் நிறைவேறிவிட்டாலும் இவ்வாறான நிகழ்வுகள் நடப்பதை நாம் காணலாம். சில மரபுகளின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆன்மீகம் மற்றும் கிரகங்களின் குழப்பங்கள் அந்த ருத்ராட்சத்தை பாதித்திருந்தாலும் அது உடைந்து விடும் என்று சொல்கிறார்கள்.
நடைமுறை காரணங்கள் :
பொதுவாக, ருத்ராட்சம் என்பது இயற்கையாக தோன்றக்கூடிய ஒரு விதை அமைப்பு. அதில் அதிகப்படியான வறட்சித்தன்மை இருந்தாலும் அது உடைந்து போகலாம். அதேபோல், ருத்ராட்சத்தை நீண்ட காலமாக அணிந்திருந்த பொழுது அது பலவீனமடைந்து உடைந்து போகலாம். மேலும், தற்செயலாக அழுத்தம் எதன் மீதாவது மோதுதல் ஏற்பட்டும் உடைந்து போகலாம்.
மேலும், செயற்கையான முறையில் ரசாயனத்தில் சேர்த்து பதப்படுத்தி வைத்திருந்தாலும் அது எளிதில் உடைந்து போக வாய்ப்புள்ளது.

ருத்ராட்சம் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஆதலால், ருத்ராட்சம் உடைந்தால் அதை அபசகுனமாக கருத வேண்டிய அவசியம் இல்லை. பல பக்தர்கள் உடைந்த ருத்ராட்சத்தை ஓடும் நீரில் விட்டு விடுவார்கள். மேலும், ருத்ராட்சம் புனிதமானதாக கருதப்படுவதால் அதனை அரசமரம் அல்லது ஆலயத்தின் அடியில் புதைத்து விடலாம். உடைந்த மணிகளை தானமாக கொடுக்கலாம்.
உடைந்த ருத்ராட்சத்தை அணியலாமா?
முடிந்தவரை உடைந்த ருத்ராட்சத்தை அணிவதை தவிர்க்க வேண்டும். சேதைமடைந்த மணிகளுக்கு பதிலாக புதியவற்றை மாற்றுவதே சிறந்தது. அதனால், ருத்ராட்சம் உடைந்தால் அதைக் கெட்ட சகுனமாக எடுத்துக் கொள்ளாமல் அது நம்மிடம் வந்த நோக்கம் நிறைவேறி விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |