திடீரென தெரு நாய் வீட்டில் முன் வந்து அமர்ந்தால் உண்மை காரணம் என்ன தெரியுமா?
சில நேரங்களில் நமக்கு பிரபஞ்சத்தினுடைய அருள் எந்த ரூபத்தில் வருகிறது என்றே தெரியாது. அந்த வகையில், திடீர் என உங்கள் வீட்டு வாசல் முன்பாக தெருநாய் வந்து அமர்கிறது என்றால் அது கட்டாயம் உணவுக்காக அல்ல அதற்கு பின்னால் இருக்கக்கூடிய உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் நாய் ஸ்ரீ பைரவ மூர்த்தியின் வாகனமாக கருதப்படுகிறார். அது தானாக வீட்டிற்கு வந்தால் இறைவனுடைய பாதுகாப்பும் அருளும் நமக்கு கிடைக்கிறது என்று அர்த்தம்.

மேலும், மனிதனுடைய கண்களுக்கு தெரியாத துர்சக்திகள் மற்றும் கண் திருஷ்டிகளை இந்த நாய் ஆனது விரட்டிவிடும். அதேபோல், எம பயம் நீங்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி நாய் கேது பகவானின் அம்சம் என்பதால் வீட்டுக்கு வரக்கூடிய நாய்க்கு நாம் உணவு வழங்கும்பொழுது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் விலகும்
அமைதியும் நல்ல அதிர்வலைகள் நிறைந்த வீடு மட்டுமே நாய்கள் எப்பொழுதும் தேடிவரும். அவ்வாறு தேடி வருகின்ற பொழுது இறைவனுடைய பரிபூரண அருள் நமக்கு இருக்கிறது என்பதை நாம் கட்டாயம் உறுதி செய்து கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |