கோடி ரூபாய் கடனையும் போக்கும் எளிய பரிகாரம் இதோ
ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்ற வேதனை பலருக்கும் உள்ளது.
கடன் தொல்லை
அது காலப்போக்கில் பெரிதாகி பெரும் சுமையாகவும் ஆகிவிடுகிறது. அதற்கு ஆன்மிகம் சொல்லும் சில பரிகாரங்களை பார்ப்போம்.

குலதெய்வத்தை பௌர்ணமி அன்று கோவிலில் பாசிப்பருப்பு பிரசாதம் படைத்து, கடன் தீர வேண்டவும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் வழிபாடு செய்யலாம். பிரசாதத்தை காகத்திற்கு சிறிது வைத்து, பின்னர் குடும்பத்தினருக்கு வழங்கவும்.
புதன் ஹோரையில் பாசிப்பருப்பை அருகிலுள்ள கோவிலில் அல்லது ஏழைகளுக்கு தானமாக வழங்கவும். இது செல்வத்தை பெருக்கி, கடனை நீக்கும்.
பாசிப்பருப்பையும் வெல்லத்தையும் கலந்து, முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பசுவுக்கு கொடுக்கவும். வாரம் ஒருமுறை இதை செய்தால், கடன் படிப்படியாகக் குறையும்.
பாசிப்பருப்பு சுண்டல் செய்து, கோவிலில் கடவுளுக்கு நைவேத்யமாக படைத்து, பக்தர்களுக்கு பிரதோஷ நாளில் வழங்குவதால் பணம் தேடி வரும்.