ஸ்ரீ ரங்கம் சென்றால் இதை பார்க்க தவறாதீர்கள்
பெருமாள் பக்தர்கள் அனைவர்க்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதஸ்வாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும்.அப்படியாக இந்தியாவிலேயே பரப்பளவில் மிக பெரிய கோயிலாக இந்த திருச்சி ரங்கநாதஸ்வாமி கோயில் திகழ்கிறது.
இந்த கோயிலில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்ரீரங்கம் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கிறது. மேலும் இந்த கோபுரங்கள் எல்லாம் தமிழ் எழுத்துக்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 21 கோபுரங்களில் எல்லா கோபுரங்களும் வண்ணமாக காட்சி அளித்தாலும் ஒரு கோபுரம் மட்டும் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.அந்த வெள்ளை நிற கோபுரத்திற்கு பின்னால் ஒரு புராண வரலாறு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகம் எங்கிலும் திருச்சி ரங்கநாதரை காண வருகை தருகின்றனர்.பொதுவாக கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள்.அப்படியாக திருச்சி ரங்கநாத கோயிலில் 21 கோபுரங்களைக் கொண்டுள்ளதால் அதை தரிசிப்பது அவ்வளவு எளிது அல்ல.
பிரம்மாண்டமான கோபுரங்களைப் பக்தர்கள் எளிதாகப் பார்த்துவிட முடியும் என்றாலும், அவை தவிர்த்துப் பல சிறப்பு வாய்ந்த கோபுரங்களும் இங்கு அமைந்துள்ளன. அப்படி அனைத்துக் கோபுரங்களையும் பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு வசதி உள்ளது.
அதாவது பக்தர்கள் எளிதாக 21 கோபுரங்களையும் தரிசிக்கும் வகையில் கோயிலில் ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு பக்தர்கள் ரூ.50 செலுத்தி ரெங்க விலாஸ் மண்டபத்தின் மேல் படிக்கட்டின் மூலம் சென்று மேல் புறத்திற்குச் செல்லலாம்.
அங்கிருந்து பார்க்கும் போது நான் சாதாரணமாகப் பார்க்க முடியாத பல கோபுரங்கள் பார்க்கமுடிகிறது.மேலும் அந்த ஒரு இடத்தில் இருந்து ரங்கநாத கோயிலில் அமைய பெற்ற அனைத்துக் கோபுரங்களையும் தரிசனம் செய்ய முடியும்.
ஆக நாம் திருச்சி சென்றால் மறக்காமல் இந்த ஒரு வசதியை பயன் படுத்தி 21 கோபுரங்களையும் சுலபமாக தரிசித்து இறைவனின் அருள் பெற்று வருவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |