26 முதல் 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கான வாழ்க்கை ரகசியங்கள் இதோ

By Sakthi Raj Jun 21, 2026 06:21 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எண் கணிதம் கொண்டு ஒருவருடைய வாழ்க்கையின் ரகசியங்கள் அவர்களுடைய முக்கிய குறியீடுகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் அதை நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கிறது.

அப்படியாக, 26 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பிறந்தவர்களுக்கான ரகசிய எண் மற்றும் குறியீடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் 26 ஆம் தேதி பிறந்தவர்கள் என்றால் உங்களுடைய அதிர்ஷ்டக் குறியீடு பைரவர் உடைய வாகனமான நாய் உள்ளது. பெரும்பாலும், இந்த தேதியில் பெண்கள் தான் அதிகம் பிறக்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களுக்காக கடுமையாக உழைத்து அவர்களுக்காக வாழக்கூடியவர்களாக உள்ளார்கள். 27 ஆம் தேதி பிறந்தவர்களுடைய குறியீடாக தேள் உள்ளது.

இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக இருப்பார்களாம்? யார் தெரியுமா?

இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக இருப்பார்களாம்? யார் தெரியுமா?

இவர்களைப் பார்த்தாலே பலருக்கும் அச்சம் உருவாகுவதையும் நாம் பார்க்க முடிகிறது. 28ஆம் தேதியில் பிறந்தவர்களுடைய அதிர்ஷ்ட குறியீடாக பெண் யானை இருக்கிறது. இவர்கள் குடும்பத்தை ஒன்றிணைந்து வழிநடத்தக் கூடிய அற்புத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தொழில் வளர்ச்சிக்காக இவர்கள் கடுமையாக பாடுபடுபவர்கள்.

29ஆம் தேதியில் பிறந்தவர்களுடைய அதிர்ஷ்ட குறியீடாக கருங்குரங்கு இருக்கிறது. இவர்கள் பார்ப்பதற்கு அழகாகவும் அதே சமயம் வீரியமிக்கவர்களாகவும் காட்சி கொடுக்கிறார்கள். 30ஆம் தேதி பிறந்தவர்களுடைய அதிர்ஷ்ட குறியீடாக முயல் இருக்கிறது.

இவர்கள் எந்த ஒரு கடினமான வேலையையும் மிக எளிதாக வேகமாக செய்து முடிக்க கூடியவர்கள். ஆக, இந்த குறியீடுகளை நம்முடைய தொழில் செய்யக்கூடிய இடங்களிலோ அல்லது நம்முடைய ஆடை அணிகலங்களில் பயன்படுத்தும் பொழுது நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் நன்மை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

மேலும், எண் கணிதம் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை நாம் பின்பற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை இந்த காணொளியில் பாச திறந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US