கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் செல்ல வேண்டிய ஆலயம்
தெய்வங்களில் மிகவும் பலமும் சக்தி வாய்ந்த கடவுளாக ஆஞ்சிநேயர் திகழ்கிறார்.அவரை வழிபட வாழ்க்கையில் தைரியமும் தெம்பும் பிறக்கும்.
அப்படியாக நமக்கு ஏற்படுகின்ற திடீர் நோய்கள் மற்றும் காலத்தால் ஏற்படும் கிரக தோஷங்கள் இவற்றில் இருந்து நம்மை காப்பாற்றி அருள்கிறார் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர்.அவரை பற்றி பார்ப்போம்.
இக்கோயில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் என்னும் கோவிலில் இந்த ஆஞ்சநேயர் இருக்கிறார்.இவர் மிகவும் விசேஷமான ஆஞ்சநேயர் மக்களால் வழிபட்டு வருகின்றார்.
அப்படியாக இவருக்கு பல இடங்களில் இருந்து மக்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் நோய்கள் தீர வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.இவ்வாறு வழிபட்டால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் நடக்கிறது என்று வழிபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் சிறப்பு மிகுந்த ஆலயத்தில் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.இவருக்கு விஷேச நாளாக செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் ஆஞ்சநேயருக்கு களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கும்.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே உள்ள ராமபிரானுக்கு புஷ்பாபிசேகம் நடக்கும். பின்னர் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கும்.இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கும்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சகல இன்பங்களும் கிடைக்கும் என்பதால் பல ஊர்களில் இருந்து மக்கள் வருகை தந்து முதலில் மும்மூர்த்திகளை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |