உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

By Sakthi Raj Mar 28, 2026 06:17 AM GMT
Report

 ஜோதிடத்தில் 9 கிரகங்களில் சுக்கிர பகவான் தான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பெண்ணை குறிக்கக்கூடியவராக இருக்கிறார். பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அவர்களுடைய தோழி கொடுக்கக்கூடியவராக இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனுக்கு சுகபோக வாழ்க்கை மகிழ்ச்சி போன்றவற்றை கொடுக்கக் கூடியவராகவும் இருக்கிறார். அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து சுக்கிர பகவான் அமர்ந்திருக்கக்கூடிய இடத்தின் பலன் என்னவென்று பார்ப்போம்.

1. லக்னத்தில் சுக்கிர பகவான் அமர்ந்திருந்தால் அந்த நபர் மிகவும் கவர்ச்சியாகவும் அழகு மற்றும் வசதி வாய்ப்புடனும் நல்ல துணிவுடன் இருப்பார்கள்.

2. இரண்டாம் இடத்தில் சுக்கிர பகவான் அமைந்திருந்தால் நல்ல வசதி வாய்ப்பு குடும்பம், அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை கவர்ச்சியான பேச்சு இது இருக்கும். இருப்பினும் தவறான பெண் தொடர்பு தீய பழக்கம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம் | Sukiran In 12 Houses Explaination And Prediction

2026: கட்டாயம் இந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் ராஜயோகம் பெறுவார்களாம்

2026: கட்டாயம் இந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் ராஜயோகம் பெறுவார்களாம்

3. மூன்றாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்கள் கலை இசை ஆர்வம் அதிக வசதி வாய்ப்பு கொண்டு இருப்பார்கள். சிலர் இசைத்துறையில் மிகப்பெரிய சாதனை பெறுவார்கள்.

4. நான்காம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்களுக்கு நல்ல அறிவாற்றல் கல்வி, அசையா சொத்துக்கள், சுக வாழ்வு, சொகுசான வாழ்வு கிடைக்கும். ஆனால் பாவிகளுடன் சேர்க்கை பெற்றால் நன்மை அல்ல.

5. ஐந்தாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்களுக்கு பூர்வீக சொத்து கல்வியில் வளர்ச்சி, மகிழ்ச்சியான மன வாழ்வு, குழந்தை பாக்கியம் எல்லாம் கிடைக்கும். இருப்பினும் பாவிகளுடன் சேர்க்கப்பட்டால் இவர்கள் கலப்பு திருமணம் செய்ய வாய்ப்பு உண்டு.

6. ஆறாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்களுக்கு தேவையற்ற செலவுகள் திருமணத்தில் தாமதத்தை சந்திக்க கூடும். ஒரு சிலருக்கு கணவன் மனைவி இடையே பிரிவுகள் உண்டாகும்.

7. ஏழாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்களுக்கு மன வாழ்க்கையில் சந்தோஷம். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். காதல் திருமணம் நடக்கும். இருப்பினும் பாவிகளுடன் சேர்ந்தால் திருமணத்தில் பிரச்சனை உண்டாகும்.

இந்த திசையில் மனை வாங்கினால் கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்

இந்த திசையில் மனை வாங்கினால் கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்

8. எட்டாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்களுக்கு எல்லாம் தாமதம் தடையும் கொடுத்த பிறகு ஒரு விஷயத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஒரு சிலருக்கு தாம்பத்திய உறவுகளில் ஈடுபட முடியாத நிலை வரலாம்.

9. ஒன்பதாம் இடத்தில் நீண்ட ஆயுள் மற்றும் செல்வம், செல்வாக்கு, வசதி பூர்விகத்தில் அனுகூலம் நற்பெயர் எல்லாம் கிடைக்கும்.

10. பத்தாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் வண்டி, வாகனம், ஆடை ஆபரணம் வாங்க கூடிய யோகம் உண்டாகும். சிலர் வாழ்க்கை துணையுடன் கூட்டு தொழிலில் ஈடுபடுவார்கள்.

11. பதினோராம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் நல்ல வசதி வாய்ப்பு எதிர்பாராத பண சேர்க்கை உடன் பிறப்புகள் வழியாக உயர்வு போன்றவை கிடைக்கும். இருப்பினும் பலம் இழந்த கிரகங்கள் இருந்தால் இவர்களுக்கு தவறான தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

12.பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தால் இவர்களுக்கு சுகவாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி தன்னுடைய வசதிக்காக நிறைய செலவுகள் செய்யக்கூடிய நிலைமை உண்டாகும் பலம் இழந்து இருந்தால் தீய பழக்க வழக்கங்களுடன் தொடர்பு கொள்ள கூடும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US