ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பொருளாதாரத்தில் உயரத்தை கொடுக்குமா?
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் ஒருவருடைய சுப போக வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையை குறிக்கக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். மேலும் ஆயுள் காரகன் மந்தன் கர்ம காரகன் என்று சனி பகவான் அழைக்கப்படுகிறார். அப்படியாக இவர்கள் இருவரும் ஒருவர் ஜாதகத்தில் இணைந்து இருந்தால் அந்த ஜாதகருடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம்.
சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளவர்கள் எப்பொழுதும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவர் கைகளில் எப்பொழுதும் பண புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஜாதகர் தொழில் ரீதியாக வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ ஆனால் செய்யும் தொழில் வழியாக அதிக அளவில் பொருளாதாரத்தை அவர்கள் சம்பாதித்து விடுவார்கள்.
அதை போல் ஜாதகர் நல்ல லட்சுமி கடாட்சம் கொண்டு விளங்குவார். இருந்தாலும் திருமண வாழ்க்கை சற்று தாமதமாக தான் அமையும் . ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை இருந்தால் அந்த ஜாதகருடைய மனைவி நல்ல அதிர்ஷ்டம் வாய்ந்தவர் ஆக இருப்பார். இவ்வாறு அமைப்பு கொண்டவர்களுக்கு காதல் திருமணம் அமைவதற்கும் அதிக அளவில் வாய்ப்புள்ளது.
சுக்கிரன் சனி சேர்க்கை கொண்ட ஜாதகர் ஆடைகளை விரும்பி வாங்கக்கூடிய நபராக இருப்பார். அதேபோல் இவர்களுக்கு ஆடைகள் அதிக அளவில் சேர்ந்து கொண்டே இருக்கும். இவர் இவர்களுக்கு பொருள் மீது சற்று ஆர்வம் அதிகமாக இருக்கும். சிலருக்கு நகைக்கடை வைக்கும் யோகமும் உருவாகும்.
சிலர் ஆடை தொழில் செய்யும் தொழிலையும் மேற்கொள்வார்கள். இவர்கள் படிப்படியாக பொருளாதாரத்தில் முன்னேறி சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைவார்கள். இருப்பினும் சுக்கிரன் சனி சேர்க்கை சமயங்களில் இவர்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டு செய்து விடும். சுருக்கமாக சொல்லப்போனால் சுக்கிரன் சனி சேர்க்கை ஒரு நல்ல பெயர் உள்ள மனிதராக வாழும் நிலை உருவாக்கி கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







