சுக்கிர திசை - வீடு, காருனு வசதியா வாழப்போகும் 5 ராசிகள்
சுக்கிர பகவான் ஜனவரி 13, 2026 அன்று மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மகர ராசியில் ஏற்கனவே இருக்கும் செவ்வாய் மற்றும் சூரியனுடன் சுக்கிரன் இணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகிறார். மேலும் ஜனவரி 17ல் புதனும் மகரத்தில் இணைவதால் மகர ராசியில் அபூர்வ கிரக சேர்க்கை நிகழ இருக்கிறது.

ரிஷபம்
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் சாத்தியமாகும். மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
மிதுனம்
திடீர் வரவு மற்றும் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி
குழந்தை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைத்து திருமணம் கைகூடும். குழந்தைகளால் பெருமை சேரும். கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும்.
துலாம்
புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். தாய் வழி பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புக்களை சுமக்க நேரிடலாம். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
மகரம்
வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வீடு, கார், வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். வீட்டை மராமத்து செய்தல், பழுது பார்த்தல் அல்லது புதிய வீடு கட்டுதல் போன்ற பணிகள் வேகமெடுக்கும்.