ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : மே 15 முதல் இந்த 3 ராசிகளுக்கு சொகுசு வாழ்க்கை உறுதி!
வேத ஜோதிடத்தின் பிரகாரம், நவகிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளின் வாழ்வில் ஆழ்ந்த ஆதிக்கத்தை கொண்ருக்கும் என நம்பப்படுகின்றது.
குறிப்பாக கிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியனின் பெயர்ச்சி ராசி பலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் நவகிரகங்களின் நாயனனான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்நிலையில் சூரியன் மே 15 ஆம் திதகி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி்ன்றார்.
ரிஷப ராசியின் அதிபதியாக காதல், அழகு, ஆடம்பரத்தின் கிரகமாக சுக்கிரன் சூரியனுடன் இணைவதால், குறிப்பிட்ட சில ராசிகள் பொருளாதார ரீதியிலும் தொழில் ரீதியிலும் உச்ச பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்
ரிஷபம்

வைகாசி மாதமானது சூரியன் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மாதமாக இருக்கும்.
குறிப்பாக இந்த காலகட்டம் கஅரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் நபர்கள் தங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு அல்லது அங்கீகாரத்தைப் பெறக்கூடும்.
அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்த பலன்களைத் தரும். நிதி நிலையில் பாரிய ஏற்றம் கிட்டும்
சிம்மம்

சூரியன் பெயர்ச்சியானது சிம்ம ராசியினருக்கு தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
வாகனங்கள் அல்லது அசையாச் சொத்துக்களால் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அதிகரிக்கும்.
விருச்சிகம்

ரிய பகவான் ஆசியால் விருச்சிக ராசியினர் வாழ்வில், நிதி நிலைமையில் அபரிமிதமான ஏற்றம் உண்டாகும்.
வேலை தொடர்பாக வெளிநாடு பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான சாதகமான நேரமாக இருக்கும்.
முன்னைய முதலீட்டிலிருந்து லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.