சூரிய பகவானை நேராக சந்திக்கும் யமன்.. ஜனவரி 23 இந்த ராசிகளுக்கு கட்டாயம் இது நடக்கும்
கிரகங்கள் அவர்களுடைய கால நிலைக்கு ஏற்ப அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் 2026 ஜனவரி 23ஆம் தேதி சூரியனும் யமனும் பூஜ்ஜிய டிகிரி இடைவெளியில் இருந்து ஒரு அற்புதமான சேர்க்கையை உருவாக்குகிறார்கள்.
இந்த சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்தாலும் குறிப்பிட்ட ஒரு சிலர் ராசிகளுக்கு இந்த தாகமானது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் யாருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

மேஷம்:
ஜனவரி 23ஆம் தேதி முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான ஒரு நிலையை உருவாக்க போகிறது. அவர்கள் தொழிலில் சந்தித்த தடைகள் விலகும். புதிய நட்புகளின் அறிமுகத்தால் தொழிலில் அவர்கள் நிறைய மாற்றங்களை சந்திக்க போகிறார்கள். குடும்ப ரீதியாக இருந்து வந்த கசப்புகளும் விரிசலும் விலகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கப் போகிறார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சிம்மம்:
ஜனவரி 23ஆம் தேதி முதல் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அவர்கள் நீண்ட நாட்களாக சாதிக்க வேண்டும் என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் நடக்கப்போகிறது. ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். இந்த காலகட்டங்களில் குடும்பத்துடன் நீங்கள் நெடுந்தூர பயணம் செல்ல நேரலாம். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். உங்களுடைய காதல் திருமணத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மகரம்:
ஜனவரி 23ஆம் தேதி முதல் மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் யமனின் சேர்க்கையால் அவர்களுடைய நீண்ட நாள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைக்கும். வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு அதில் வெற்றி பெறக்கூடிய அற்புதமான சூழல் உண்டாகும். வீடுகளில் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும் உடன் பிறந்தவர்கள் ஆதரவு பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |