இன்றைய ராசி பலன்(16-03-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு உடல் அசதி உண்டாகலாம். நண்பர்களிடம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டாம். நிதானம் கடைப்பிடிப்பது அவசியம்.
ரிஷபம்:
தேவை இல்லாத குழப்பங்கள் மனதில் உருவாகும். ஒரு சிலருக்கு மதியம் மேல் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றலாம். கவனமாக இருப்பது அவசியம். தொலைபேசிகளில் கவனமாக இருக்கவேண்டும்.
மிதுனம்:
ஒரு சிலருக்கு எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். அதனால் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்ல தீர்வு கொடுக்கும். உணவுகளில் சில கட்டுப்பாடு வைத்து கொள்வது நன்மை தரும்.
கடகம்:
மனைவி வழி உறவால் சில சங்கடம் உருவாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
சிம்மம்:
இன்று அளவிற்கு அதிகமாக கோபம் வரலாம். அதனால் பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசவேண்டும். முடிந்த வரை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
கன்னி:
மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தடைபட்ட வருவாய் வரும்.
துலாம்:
மனதில் இனம் புரியாத கவலை உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். உணவு விஷயங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்:
வருமானத்தில் இருந்த தடை விலகும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும்.
தனுசு:
இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். உங்கள் திறமை மேம்படும். இறைவழிபாடு நன்மை அளிக்கும்.
மகரம்:
எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். பெரியோரின் துணையால் வேலை நடந்தேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.
கும்பம்:
உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை வேண்டும். வீண் செலவும் மனபயமும் உண்டாகும்.
மீனம்:
குடும்பத்தில் உண்டான பிரச்சனை விலகும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு மனதில் உள்ள குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |