துர்க்கை அம்மனை வழிபட்ட சூரிய பகவான்
கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பொழுது இறைவனின் பாதத்தை தரிசித்த பிறகே, இறைவனின் முகத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.
அதாவது சூரியனின் ஒளி காலையில் இறைவனின் கால்களை வணங்கி மாலையில் அஸ்தமனம் ஆகும் பொழுது இறைவன் முகம் பார்த்து இறைவன் அருள் பெற்று மறையும்.
இப்படியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மிக பழமையான பல்லவர் காலத்து அம்மன் கோயில் ஒன்று உள்ளது .
இந்த அம்மன் மூலவர் மீது சூரியனின் கதிர் ஒலிகள் எப்பொழுதும் பிரகாசமாக விழுவதுண்டு.
ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி காலையில் அம்மன் மீது சூரிய ஒளி ஒரு பகுதியாகவும், ஏப்ரல் ஐந்தாம் தேதி காலையில் முழுமையாகவும் ஏப்ரல் ஆறாம் தேதி காலையில் ஒரு பகுதியாகவும் சூரிய ஒளி துர்கை அம்மனை வழிபடும் அறிய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது
இதை மக்கள் அதிசயமாகவும் ஆன்மிகத்தின் வெளிச்சமாகவும் பார்த்து இறைவனை தரிசனம் செய்து வருகின்றனர்.