இந்த கிரக அமைப்பு உள்ளவர்களிடம் கவனமாக பேச வேண்டுமாம்.. ஏன் தெரியுமா?

By Sakthi Raj Apr 26, 2026 05:52 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரக அமைப்புகள் கொண்டுதான் நாம் ஒருவருடைய ஜாதக பலனை கணித்து சொல்கின்றோம். அப்படியாக, ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடமும் அவை சேர்ந்து இருக்கக்கூடிய கிரகங்கள் அதனுடைய பார்வை என்று எல்லா விஷயங்களை வைத்து தான் நாம் ஜோதிடம் கணிக்கின்றோம்.

அந்த வகையில், நம்முடன் பழகும் நபர்களில் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்களிடம் விளையாட்டாக கூட ஏதாவது சவால்களை வைத்து விட்டால் அந்த சவால்களை அவர்கள் முடிக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த நபர் மிகவும் மரியாதை எதிர்பார்ப்பவர்கள் ஆகவும் தன்மானமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த கிரக அமைப்பு உள்ளவர்களிடம் கவனமாக பேச வேண்டுமாம்.. ஏன் தெரியுமா? | Suriyan Budhan Serkai Prediction In Horoscope

அதாவது, ஜாதகத்தில் யாருக்கெல்லாம் சூரியன் மற்றும் புதன் பகவானுடைய சேர்க்கை இருக்கிறதோ அந்த நபரிடம் நாம் மிகவும் கவனமாக பேச வேண்டும். வார்த்தைகளில் கவனம் இல்லாமல் அவர்களுடைய தன்மானம் பாதிக்கப்படுகின்ற அளவில் யாரேனும் எதுவும் பேசிவிட்டால் நிச்சயம் அந்த நபர் பேசியதற்கு சரியான பாடம் கற்பிக்காமல் இவர்கள் விட மாட்டார்கள்.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

உதாரணமாக இந்த வேலையை உன்னால் செய்ய முடியாது என்று இவர்களிடத்தில் யாராவது சொல்லிவிட்டால் அந்த வேலையை கட்டாயம் இவர்கள் செய்து அந்த வேலையிலே இவர்கள் மிகப்பெரிய அளவில் உயரக் கூடிய மன வலிமை இந்த புதன் மற்றும் சூரியன் சேர்க்கை பெற்றவர்களுக்கு உண்டு.

காரணம் புதன் பகவான்தான் அறிவு மற்றும் படிப்புக்கு காரணியாக இருக்கிறார். சூரியபகவான் ஆளுமைக்கு காரணியாக இருக்கிறார். இவை இரண்டும் சேரும் பொழுது நினைத்த விஷயத்தை சாதிக்க கூடிய வலிமையை கிடைக்கிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US