இந்தாண்டின் முதல் சூரிய கிரகணத்தால் 3 ராசிகளுக்கு கண்டம்? எதெல்லாம் தெரியுமா
2026-ன் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17-ல் நிகழ இருக்கிறது. இது கும்ப ராசியில் நடப்பதால் 3 ராசிகளின் மனநிலை, ஆரோக்கியம், நிதி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறு தவறுகளால் பெரிய நஷ்டம் வரலாம்.

சிம்மம்
மரியாதை குறையும். இந்த காலக்கட்டத்தில் அதிக உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் மன அழுத்தம், சண்டைகள் ஏற்படலாம். ஆணவத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் கவனம் தேவை.
விருச்சிகம்
பணம் விஷயங்களில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் சிக்கலைத் தரும். முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக கவனத்துடன் இருக்கவும்.
கும்பம்
குடும்பத்தில் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். இதன் காரணமாக தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எழலாம். வீட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக தூக்கமின்மை ஏற்படும். உடல்நலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க கூடாது அது பெரிய பெண் விளைவுகளை ஏற்படுத்தலாம் முடிவெடுப்பதில் குழப்பம் உண்டாகும்.