உங்கள் வீட்டில் இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வத்தின் முழு அருள் உள்ளதாம்
குடும்பத்தில் குலதெய்வத்தின் அருள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதாவது, குலதெய்வத்தின் அருள் இருந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு எந்த ஒரு பாதிப்பும் எந்த ஒரு தடை தடங்களும் ஏற்படாது. அந்த வகையில், ஒரு குடும்பத்தினருக்கு குல தெய்வத்தின் முழு அருள் இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய சில அறிகுறிகள் உள்ளது. அதை பற்றி நாம் பார்ப்போம்.
ஒருவர் வீடுகளில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்கிறது என்பதை நாம் கட்டாயமாக சில அறிகுறிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். அது முதலாவதாக வீடுகளில் விளக்கு எண்ணெய் விடாமல் எரிந்து கொண்டே இருக்கும். அதேபோல், துளசி செடி மிகவும் செழிப்பாக வளரும். எந்த நிலையிலும் அவ்வளவு எளிதாக வாடி விடுவதில்லை.

அதேபோல், குலதெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வீடுகளில் எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் நாம் கடைகளுக்கு சென்று வாங்காமல் யார் வழியாக நம்மை தேடி வரும். அதேபோல், முருகப்பெருமானுடைய வாகனமான மயிலின் தோகைகள் நமக்கு கிடைப்பதையும் நாம் பார்க்கலாம்.
யாராவது ஒரு நபர் மயில் தோகைகளை நமக்கு பரிசாக அளிப்பார்கள். குடும்பத்தில் எப்பொழுதும் மன அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். வீடுகளில் குங்குமம் எப்பொழுதும் செழிப்பாக இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்கும். ஆனால், பல வீடுகளில் இந்த சாதாரண விஷயங்கள் கூட அவர்களுக்கு இயல்பாக நடப்பதில்லை.

அதில் தடைகளை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லை என்று சொன்னாலும் மனமும் சூழ்நிலையும் சரியாக அமைந்துவிட்டால் எல்லாம் சுமூகமாக அமையும்.
ஆக, அந்த இடத்தில் ஒரு நல்ல அதிர்வலை இல்லாத காரணத்தினால் தான் நம்மால் மன அமைதியோடு சில விஷயங்களை பின்பற்ற முடியவில்லை. அவ்வாறு இருக்கின்ற நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக குலதெய்வத்தை வழிபாடு செய்வது அவசியமாக உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |